இருநாள் வேலைநிறுத்தத்தை அறிவித்த பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - போராட்டம் வலுவடையும் சாத்தியம் முள்ளிநியூஸ்

இருநாள் வேலைநிறுத்தத்தை அறிவித்த பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - போராட்டம் வலுவடையும் சாத்தியம்

இருநாள் வேலைநிறுத்தத்தை அறிவித்த பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - போராட்டம் வலுவடையும் சாத்தியம்

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் இருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தயாராகி வருகிறது. 

 இதன்படி, இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களில் இவ்வாறு அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

 பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

 இந்த நிலையில், அரசாங்கத்தினால் தமக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டுமெனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

 இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிக்கை கோரி நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அரச மற்றும் மாகாண அரச சேவையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. 

 இதன்படி, அனைத்து அரச சேவையாளர்களும் இன்று (30) நண்பகல் 12 மணிக்கு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கூட்டமைப்பின் இணைப்பாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்துள்ளார். 

 அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி, அலுவலக சேவைகள் மற்றும் மாகாண அரசாங்க சேவைகள் என பல்வேறு சேவையாளர்கள் இணைந்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இதனிடையே, எதிர்காலத்தில் 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரி தனியார் மற்றும் அரை அரச துறைசார் பணியாளர்களும் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 

 அத்துடன், அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அடுத்த வாரத்திற்குள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW