மூன்றாவது தடவையாக மின் கட்டணத்தை அதிகரிக்க முயற்சி!

கீழ் வெளியிடப்பட்ட அரசாங்க கொள்கை வழிகாட்டுதல்களின் பிரகாரம், ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே மின் கட்டணத்தை திருத்த கொள்கை ரீதியாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் கொள்கைக்கு மாறாக மூன்றாவது தடவையாகவும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
இதனால் மக்கள் படும் துயரங்களை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பாக நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடமும் சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் பல கேள்விகளை முன்வைத்து இன்று (18) சபை அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.