அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது நீதிமன்றம் தீர்ப்பு முள்ளிநியூஸ்

அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது நீதிமன்றம் தீர்ப்பு

அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது நீதிமன்றம் தீர்ப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று (6) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. 

 இதனை அடுத்து அமைச்சர் நசீர் அஹமட், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கட்சியின் தீர்மானத்தினை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டார்.

 இதற்கு எதிராக அமைச்சர் நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW