பாடசாலை பிள்ளைகளான அக்கா, தங்கையின் நிர்வாணப் படங்கள் - (பெற்றோரே அவதானம்)

அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். அதனை தவிர்ப்பதற்காக மூத்த சகோதரியிடமிருந்து 50,000 ரூபாவை வங்கிக் கணக்கின் ஊடாக பெற்றுக்கொண்டார்.
அவ்வாறு அச்சுறுத்திய இராணுவ சிப்பாய், பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வடக்கில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் 21 வயதானவர் என்றும் அவர் குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் என்றும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
16 வயது பள்ளி மாணவி, இராணுவ வீரரின் முகநூல் பக்கத்தின் மூலம் காதல் உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார், ஆனால் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கவில்லை என்று விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW