தொடரும் இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினை - இதற்கு தீர்வுதான் என்ன? முள்ளிநியூஸ்

தொடரும் இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினை - இதற்கு தீர்வுதான் என்ன?

தொடரும் இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினை - இதற்கு தீர்வுதான் என்ன?

இலங்கை, - இந்­திய மீனவர் பிரச்­சினை நீண்­ட­கா­ல­மாக தொடர்ந்து கொண்­டி­ருக்கும் ஒன்­றாகும். 

ஆனால், அதற்கு இது­வரையிலும் ஒரு நிலை­யான தீர்வைக் காண முடி­யாத நிலைமை காணப்­ப­டு­கி­றது. இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீ­றிய மீன்­பிடி நட­வ­டிக்­கை­களால் வடக்கு - கிழக்கு மீன­வர்­களின் வாழ்­வா­தாரம் பாரி­ய­ளவில் பாதிக்­கப்­ப­டு­கி­றது.

 
 ஜனா­தி­ப­திகள் உள்­ளிட்ட முன்­னைய தலை­வர்­களால் இது தொடர்பில் பல சந்­தர்ப்­பங்­களில் ஆரா­யப்­பட்­டி­ருக்­கின்ற போதிலும், இரு நாட்டு அர­சாங்­கங்­களும் இந்த விட­யத்தில் பொறுப்­புடன் செயற்­ப­ட­வில்லை என்­பது மீன­வர்கள் மத்­தியில் காணப்­படும் ஒரு மனக்­கு­றை­யாகும்.


 இந்நிலையில், இலங்கை கடற்படை கைது நடவடிக்கை கண்டித்தும் மத்திய, மாநில அரசை கண்டித்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.
 தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று கடலுக்குச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்ததால் கூறி ஐந்து விசைப்படகும் அதிலிருந்து 37 மீனவர்களின் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 


 இதனைக கண்டிக்கும் விதமாக இராமேஸ்வரம் துறைமுகத்தில் நடந்த மீனவர்கள் அவசர கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதாக தீர்மானிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 
 அதனைத் தொடர்ந்து நவம்பர் 3ஆம் திகதி ரயில் மறியலில் ஈடுபடுவதாக அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் அறிவித்துள்ளனர். 


 இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதுடன், இழுவை படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. சட்டவிரோத மீன்பிடி செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடற்பரப்பில் வழக்கமான ரோந்து நடவடிக்கைகளில் கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 


 இந்நிலையில், இன்று நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்களையும், அவர்களது இரு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
 கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்திலுள்ள நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

 மேலும், தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்களையும்அவர்களது மூன்று விசைப்படகுகளையும் நேற்றைய தினம் இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததுடன், மேலதிக விசாரணைகளுக்காக கைதான மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 


 கடந்த 14ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 64 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 10 இந்திய இழுவை படகுகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


 இவ்­வாறு இரு தரப்­பிலும் கைது செய்­யப்­படும் மீன­வர்கள் அவ்­வப்­போது விடுக்­கப்­ப­டு­கின்ற போதிலும், அவர்கள் தமது மீன்­பிடி பட­கு­களை மீளப் பெற்றுக் கொள்­வதில் பெரும் சிர­மங்­களை எதிர்­கொள்­கின்­றனர்.
 இந்த ஆண்டு இதுவரையில் 170ற்கும் அதிகமான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இவ்­வாண்டில் மாத்திரம் (ஜன­வரி - ஜூலை) சட்ட விரோத மீன்­பிடி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டமை தொடர்பில் 174 இந்­திய மீனவர்கள் உள்­ள­டங்­கு­வ­தோடு, அவர்களின் 14 மீன்­பிடி படகுகளும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. 


 கடல் வளத்­துக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான முறைமையைப் பயன்­ப­டுத்தி மீன்­பிடி நட­வ­டிக்­கை­களில் ஈடுபடுகின்றமையே இவர்கள் கைது செய்­யப்­ப­டு­வ­தற்­கான காரணமாகும்.


 பராம்­ப­ரிய முறை­மை­யி­லி­ருந்து விலகி, இழு­வைப்­ப­டகு முறைமையை பயன்­ப­டுத்­து­கின்­ற­மையே இந்த பிரச்சினைகளுக்கு வழி­வ­கு­கின்­றது. 2023 ஜன­வரி முதல் ஆகஸ்ட் வரை கைது செய்­யப்­பட்ட இந்­திய மீன­வர்கள் எண்ணிக்கை வருமாறு 
 மாதம் மீனவர் பட­குகள் 
 ஜன­வரி - - 
 பெப்­ர­வரி - - 
 மார்ச் 28 4 
 ஏப்ரல் - - 
 மே - - 
 ஜூன் 31 5 
 ஜூலை 24 4 - 
 ஆகஸ்ட் 10 1 - 
 செம்டெம்பர் 22 3 
 ஒக்டோபர் 50ற்கும் அதிகமான மீனவர்கள் பதிவாகிய மாதமாக கருதப்படுகின்றது. 
 கச்­ச­தீவு இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டதன் பின்னர் எழுந்த பிரச்சினை 1921 ஆம் ஆண்டு இந்­திய, - இலங்கை பிரிட்டிஷ் அதி­கா­ரிகள் ஒரு மீன்­பிடி ஒப்­பந்தம் செய்து கொண்­டார்கள்.

 அதன்­படி, இந்­திய பகு­தியில் அதி­க­மாக மீன­வர்கள் உள்­ளதால் பாக்கு நீரிணையில் அவர்­க­ளுக்கு அதிக கடல்­ப­கு­தியும், இலங்­கையில் குறை­வான மீன­வர்கள் உள்­ளதால் அவர்களுக்கு பாக்கு நீரிணையில் குறை­வான கடல் பகு­தியும் பிரிக்­கப்­பட்­டது.

 அதன்­படி இந்­தி­யா­வுக்கு கச்­சத்­தீவு உள்­ளிட்ட 28 கடல் மைல் பகு­தி­களும் இலங்­கைக்கு நெடுந்­தீவு உள்­ளிட்ட 12 கடல் மைல் கடல் பகு­தி­களும் பிரிக்­கப்­பட்­டன. 


 ஆனால், 1974இல் கச்­சத்­தீவு இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டதால் தமது பாரம்­ப­ரிய மீன்­பிடி பகு­திகள் பறி­போ­ன­தாக இந்­திய மீன­வர்கள் தெரி­விக்­கின்­றனர். இதனால் இந்­திய மீன­வர்கள் பயன்­ப­டுத்தி வந்த 500 சதுர கி.மீ. கடல் இலங்கை வச­மா­ன­தா­கவும் ஆனாலும் 1974 கச்­சத்­தீவு ஒப்பந்தத்தின் 6ஆம் சரத்­துப்­படி இந்த 500 சதுர கி.மீ. பரப்­ப­ளவில் இரு நாட்டு மீன­வர்­களும் மீன்­பி­டிக்க உரி­மை­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 


 இந்நிலையில் பாக்கு நீரிணை (பாக் ஜல­சந்தி) கடல் பகு­தி­களில் இந்­திய மீன­வர்கள் இழு­வைப்­ப­டகில் இழு­வ­லையை பயன்­ப­டுத்தி மீன்­பி­டிப்­பதால், இந்­திய, இலங்கை மீன­வர்­க­ளி­டையே பிரச்சினைகள் ஏற்­ப­டு­கின்­றன. 

 இந்த பிரச்­சி­னைக்­கான தீர்வே தசாப்­தங்கள் கடந்தும் இழு­ப­றி­யி­லுள்­ளது. பாக்கு நீரிணை கடல்­ப­கு­தியில் இந்­திய மீன­வர்கள் இழுவை வலையைப் பயன்­ப­டுத்த கூடாது என இலங்கை மீன­வர்கள் கூறு­கின்­றனர்.


 இந்­திய மீன­வர்கள் தரப்பில் இதற்­கான மாற்று வழியைக் கேட்­கின்­றனர். அதேசமயம் செவிள் வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தடையில்லை என இலங்கை மீன­வர்கள் தரப்பில் கூறப்­ப­டு­கி­றது. 


 இதேவேளை, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அண்மையில் கடிதம் எழுதி உள்ளார். 


 தொடரும் இந்த மீனவர் பிரச்சினை காரணமாக அதிகமாக பாதிக்கப்படுவது என்னவோ மீனவர்களும் அவர்களது குடும்பமும் தான். ஆகவே, இவர்களுக்கான தீர்வு ஒன்றை பெற்றுத் தரவேண்டியது இரு நாட்டு அரசியல் பெருந்தகைகளின் கடமை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW