இஸ்ரேல - ஹமாஸ் மோதலால் அதிகரிக்கும் எரிவாயு விலை!

இதன் காரணமாக இலங்கையிலும் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு எரிவாயு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 500 ரூபாவால் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.
அதேவேளை எரிவாயு விலையாந்து இறுதியாக கடந்த 5ஆம் திகதி எரிவாயு விலை திருத்தப்பட்டது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 343 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு தற்போது 3 ஆயிரத்து 470 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு தற்போது 3 ஆயிரத்து 985 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிற நிலையில் எரிவாயு விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.