மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்காக வெளிவிவகார அமைச்சிடமிருந்து அவசர அறிவிப்பு

0094711 757 536 அல்லது 0094711 466 585 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் மத்திய கிழக்கில் நடந்துவரும் மோதல் சூழ்நிலைகள் தொடர்பாக அவர்களுக்குத் தேவைப்படும் ஏதேனும் தகவல்கள் அல்லது உதவிகள் தொடர்பாக தொடர்புகொள்ள முடியும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
தூதரக விவகாரங்களை வழமையான அலுவலக நேரங்களில் +94 112 338 837 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் repatriation.consular@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், டெல் அவிவ் (இஸ்ரேல்) மற்றும் ரமல்லா (பலஸ்தீனம்) ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறும் வெளிவிவகார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.