இஸ்ரேலின் விவசாயத்திற்காக 10,000 இலங்கையர்கள்

இஸ்ரேலின் உள்விவகார அமைச்சர் மோஷே ஆபெல் மற்றும் இலங்கைப் பிரதிநிதி ஆகியோர் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சில் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாக நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம் 10,000 இலங்கைத் தொழிலாளர்களை உடனடியாக விவசாயப் பணிகளுக்கு அழைத்து வருவதற்கு இஸ்ரேலுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இஸ்ரேலியப் போரினால் சுமார் 8,000 விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியதாகவும், மேலும் 20,000 பலஸ்தீனிய விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இஸ்ரேலில் விவசாயத் தொழிலாளர்கள் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் குளோப்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் எதிர்வரும் வாரங்களில் இலங்கைப் பணியாளர்கள் இஸ்ரேலுக்கு வரவுள்ளதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW