2024ஆம் ஆண்டுக்கான 'பட்ஜெட்' எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் முள்ளிநியூஸ்

2024ஆம் ஆண்டுக்கான 'பட்ஜெட்' எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல்

2024ஆம் ஆண்டுக்கான 'பட்ஜெட்' எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல்

2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்) எதிர்வரும் திங்கட்கிழமை (நவம்பர் 13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

 சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூடிய போது எதிர்வரும் 13ஆம் திகதி வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

 வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு நடைபெறும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

 மேலும், வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

 நவம்பர் 22 முதல் டிசம்பர் 13 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து 19 நாட்களுக்கு குழுநிலை விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி, 2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW