தெஹிவளையில் 10 பள்ளிவாயல்களுக்கு அனுமதி வழங்கியது நானே : பேருவளை மஹிந்த ஆதரவாளர்களிடம் தெஹிவளை முன்னாள் மேயர் தனசிறி

கூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரை கண்டி நகரில் இருந்து சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று காலை பேருவளை முன்னாள் நகரசபை தலைவர் மில்பர் கபூர் அவர்களின் முக்கிய ஆதரவாளர்கள் இன்று காலை முன்னாள் ஜனாதிபதியை பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தை வீட்டில் சந்தித்துள்ளனர்.
இதன் போது அங்கிருந்த தெஹிவளை நகர சபை முன்னாள் தலைவர் தனசிறி தனக்கு தெஹிவளை முஸ்லீம்கள் வாக்களித்ததாகவும் அவர்களுக்கு தான் நன்றிக்கடன்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் நகரசபை தலைவராக பதவியேற்ற போது தெஹிவளையில் 7 பள்ளிவாயல்கள் இருந்ததாகவும் தற்போது 17 பள்ளிவாயல்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் தனது பதவிக்காளத்தில் 10 பள்ளிவாயல்களுக்கு அனுமதி பெற்றுக்கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது ஆட்சியில் உள்ள மைத்ரி ரனில் அரசு பாத்திய மாவத்தை பள்ளிவாயலுக்கு வழங்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாமல் இருப்பது ஏன் எனவும் ஆட்சியில் இருக்கும் அவர்கள் சிறுபான்மை மக்களை கேடயமாக பயன்படுத்திவருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தவிர நாட்டில் பல பிரதேசங்களில் முஸ்லீகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள அவர் இவைகளுக்கும் நாம் பொறுப்பு கூற வேண்டும் என கூறுவதை விடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய பாதயாத்திரையில் கலந்துகொள்ள பேருவளை சீனன்கோட்டை பிரதேசத்தில் இருந்து பேருவளை நகர சபை தலைவர் மில்பர்கபூர் அவர்களின் ஆதரவாளர்கள் கலந்துகொள்கின்றனர்.