லொறியை ஏற்றி 84 பேரை கொன்றது எப்படி? மனதை பதற வைக்கும் வீடியோ வெளியானது முள்ளிநியூஸ்

லொறியை ஏற்றி 84 பேரை கொன்றது எப்படி? மனதை பதற வைக்கும் வீடியோ வெளியானது





video player

video player 2


பிரான்சின் நைஸ் நகரில் நேற்றிரவு Bastille Day கொண்டாட்டத்தில் மக்கள் இருந்த போது எதிர்பாராதவிதமாக நபர் ஒருவர் லொறியை கூட்டத்தை நோக்கி செலுத்தியதில் 84 பேர் பலியாகினர்.

பின்னர் பொலிசார் நடத்திய அதிரடி தாக்குதில் தாக்குதல் நடத்திய நபர்(லொறி ஓட்டுநர்) சுட்டுக் கொல்லப்பட்டார்.

தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில்,

மக்கள் மிகவும் சந்தோஷமாக கொண்டாட்டங்களை ரசித்து கொண்டிருந்த நிலையில், லொறி ஒன்று வேகமாக அவர்களை நோக்கி வருகின்றது.

மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வரும் நபர் லொறியை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்கிறார்.

தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகளும் தங்களது துப்பாக்கியால் லொறி ஓட்டுனரை தாக்க முயற்சி செய்தும் பலனில்லாமல் போகிறது.

பொலிஸ் அதிகாரிகளை பார்த்ததும் மிக வேகமாக லொறியை செலுத்தி மக்களை கொல்வது போன்றும், மக்களின் அலறல் சத்தத்துடன் வீடியோ முடிவடைகிறது.

மற்றொரு வீடியோவில், கொடூரமான தாக்குதலை பார்த்த நபர் ஒருவர் நடந்த சம்பவத்தை விவரிக்கிறார்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW