சற்றுமுன்னர் புதுக்குடியிருப்பில் மதுபோதையில் வந்த வாகனம் மோதி கோரவிபத்து!! முள்ளிநியூஸ்

சற்றுமுன்னர் புதுக்குடியிருப்பில் மதுபோதையில் வந்த வாகனம் மோதி கோரவிபத்து!!


முல்லைத்தீவு



சற்றுமுன்னர் புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மையாக இடம்பெற்ற பாரிய விபத்தில் இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர் .

விபத்து தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கையில் ….

புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மையாக சற்றுமுன்னர் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் விபத்தை ஏற்படுத்திய கார் தென்னிலங்கையில் இருந்து சுற்றுலாவுக்காக வந்த கார் எனவும் காரில் அதிகளவில் மதுபான போத்தல்கள் காணப்பட்ட்தாகவும் வாகன சாரதி மது போதையில் காணப்பட்ட்தாகவும் தெரிவித்தார் .

குடித்து விட்டு வாகனத்தை ஒட்டி வந்த தென்னிலங்கை சாரதி மோட்டார் சைக்கிளில் சென்ற புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இரு இளைஞர்கள் மீதே மோதியுள்ளார்.இதில் வீதியை விட்டு தூக்கி எறியப்பட்ட இளைஞர்கள் படுகாயங்களுக்குள்ளான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இதில் ஒரு இளைஞர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகின்றது .இந்த விபத்தின் காரணமாக பிரதேசத்தில் சிறு பதற்ற நிலைமை நிலவுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார் .



செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW