இலங்கையில் காஷ்மீருக்கு ஆதரவாக, ஆர்ப்பாட்டம் செய்தமைக்கு இந்தியா எதிர்ப்பு முள்ளிநியூஸ்

இலங்கையில் காஷ்மீருக்கு ஆதரவாக, ஆர்ப்பாட்டம் செய்தமைக்கு இந்தியா எதிர்ப்பு



சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தானியர்கள் கடந்த வாரம் கொழும்பிலுள்ள ஐ.நா பணியகம் முன்பாக, இந்திய அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொண்ட போராட்டம் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளது.

கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்துலக ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் அளித்திருந்தன.

காஷ்மீரில், மனித உரிமைகள் மீறப்படுவதாக, கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் முன்பாக பாகிஸ்தானியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விவகாரத்தை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் கொண்டு செல்லவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW