ராமேஸ்வரம் அருகே உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் சிலை வைக்க எதிர்ப்பு #TamilMuslims முள்ளிநியூஸ்

ராமேஸ்வரம் அருகே உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் சிலை வைக்க எதிர்ப்பு #TamilMuslims




ராமநாதபுரத்தில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் உயர்மட்டக் குழு கூட்டம் தலைவர் வலியுல்லா ஹழரத் நூரி தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், ராமேசுவரம் நினைவிடத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு சிலை வைப்பது இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமானது. இதுவரை இஸ்லாமிய தலைவர்கள் யாருக்கும் சிலை வைக்கப்படவில்லை. சிலை வைப்பது இஸ்லாமிய மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகும்.

எனவே மத்திய, மாநில அரசுகள் அப்துல் கலாமுக்கு மணிமண்டபம், நூலகம், ஆராய்ச்சிக்கூடம் அமைப்பது போன்றவற்றை மட்டும் செயல்படுத்த வேண்டும். உருவச்சிலை வைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW