ஹக்கீமை துரத்திவிட்டு புதிய கட்சி அமைக்க திட்டம் என்கிறார் சேகு இஸ்ஸதீன் #Cegu முள்ளிநியூஸ்

ஹக்கீமை துரத்திவிட்டு புதிய கட்சி அமைக்க திட்டம் என்கிறார் சேகு இஸ்ஸதீன் #Cegu





கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு பல எதிர்ப்புகள் வெளிக்கிளம்பியுள்ள நிலையில், விரைவில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு முஸ்லிம்களின் நலன்களில் அமைச்சர் ஹக்கீம் அக்கறை கொள்வதில்லையென குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், விரைவில் புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.

ஹக்கீமின் கொள்கையுடன் முரண்படும் பலர், புதிய கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளதாக சேகு இஸ்ஸதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகளை அமைச்சர் ஹக்கீம் புறந்தள்ளி வருவதாக தொடர்ந்து பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதோடு, ஹக்கீமுடன் முரண்படும் சிலர் தற்போது ‘கிழக்கின் எழுச்சி’ என்ற பெயரில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது (ஆ-ன்) செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW