திருகோணமலையிலும் ஆர்ப்பாட்டம்! முள்ளிநியூஸ்

திருகோணமலையிலும் ஆர்ப்பாட்டம்!


திருகோணமலை மாவட்ட கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தை சேர்ந்த ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவப் பீட மாணவர்கள் ஒன்றிணைந்து மாபெரும் கண்டனப் பேரணி ஒன்றை இன்று காலை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை பல்கலைக்கழக வளாக விடுதிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபை வரை சென்றடைந்தது.

ஆயுர்வேத மருத்துவ பீடத்தில் 900 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆனால் அதற்கானநியமனங்கள் வழங்கப்படவில்லை. குறித்த நியமனங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தாலும் அதை நிறைவேற்றவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும், மருத்துவ பீட மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படுவது இல்லை எனவும்கடந்த காலங்களில் வெளியேறிய மாணவர்களுக்கான நியமனங்கள் இன்னமும்வழங்கப்படவில்லை. இதன் காரணமாக எதிர்காலத்தில் குறித்த துறையினை தெரிவுசெய்யும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது இன்று நாட்டின் முழு மருத்துவப் பீட மாணவர்களினாலும் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW