பலத்தை கைப்பற்ற இனவாதம் தோற்றுவிக்கப்படுகின்றது
சகல கட்சிகளும், குழுக்களும் தமது அரசியல் பலத்துக்காக இனவாதத்தை தோற்றுவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், அனைத்து இன மக்களுடைய உரிமைகளை ஏற்றுக்கொள்வதன் மூலமே தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசியல்வாதிகள் இனவாத கருத்துக்கள் ஊடாக மக்களை பிரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW