துருக்கி – முஸ்லிம் உம்மாவின் வானில் ஒரு நம்பிக்கை தரும் ஒரு ஒளிக் கீற்று முள்ளிநியூஸ்

துருக்கி – முஸ்லிம் உம்மாவின் வானில் ஒரு நம்பிக்கை தரும் ஒரு ஒளிக் கீற்று





Dr. Aqil Ahmad Sharifuddeen

துருக்கி – கிலாபாவின் தலை நகர்

துருக்கியின் மீளெழுகை – கிலாபாவின் மீள் நிர்மாணம்

துருக்கியின் தலைவர் – கலீபா

துருக்கிக்கான ஆதரவு – கிலாபாவுக்கான பைஅத்

இவ்வாறு துருக்கியர் எவருமோ அல்லது துருக்கிக்கு ஆதரவான எவருமோ சொல்லிக் கொள்ளவில்லை.

மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும், உள்ளிருந்தும் வெளியே இருந்தும்

சீரழிக்கப்படுகின்ற முஸ்லிம் உம்மத்துக்கு ஒரு அரணாக நிற்கும் என எதிபர்ப்பு வைக்கக் கூடிய வகையில் தன்னை கட்டமைத்துக் கொண்டும், முஸ்லிம் உம்மாவின் விவகாரங்களிலும் நம்பிக்கை தரக்கூடிய வகையில் முன்னெடுப்புக்களை எடுத்துக் கொண்டும் துரிதமாக முன்னேறும் ஒரு நாட்டின் மீது உலகளாவிய முஸ்லிம்கள் வைத்திருக்கும் மானசீகமான அபிமானத்தின் வெளிப்பாட்டையே துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட சதிப் புரட்சியைத் தொடர்ந்து நாம் காண்கிறோம்.

ஆனால், அமெரிக்க அடிவருடி ஷா வுக்கு எதிரான தமது உண்ணாட்டுப் புரட்சியை இஸ்லாமியப் புரட்சியாகச் சித்தரித்து, அப்போது உம்மத்தின் அபிமானத்தை கபளீகரம் செய்து கொண்டு தமது கொள்கைக்கு இஸ்தீரம் கொடுப்பதற்காக ஒரு அரசியல் களத்தைச் சமைத்துக் கொண்ட, ஹுஸைன் (ரலி) க்கு உருவம் வைத்து வணங்கும் ஷீஆக்களும்,

இன்னும், இரு ஹரம்களின் காவலர்கள் என தம்மை உருவகித்துக் கொண்டு, இறையியல் முதல் பிறை விவகாரம் வரை முழு உம்மத்தையும் சீரழித்துக் கொண்டு, இறுதிப் பத்தில் இஃதிகாப் இருப்பதைக் கூட விளம்பரமாக்கி வியாபாரம் செய்கின்ற, அவ்வப்போது மியன்மாரின் காலை உடைப்போம், இஸ்ரேலின் கழுத்தை முறிப்போம், அமெரிக்காவின் வாலைத் தறிப்போம் என உசுப்பேற்றி பூச்சாண்டி காட்டும் சுஹூதுகளும், உம்மத்தின் நாயகர்களாக களம் கண்ட நாம் சாதிக்காததை துருக்கி சாதித்து விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.

உம்மத்தின் இறைமையை ஆசிக்கின்ற மக்கள் துருக்கியின் பக்கம் சாய்ந்து விடுவார்களோ என்ற கிலியில் அவர்கள் உழல்கின்றார்கள்.

இதனால் இவ்விரு திறத்தாரும் அவர்களது அபிமானிகளையும், அவர்களால் ஊட்டி வளர்க்கப் படுபவர்களையும் கொண்டு துருக்கியையும், அதன் மீதான அபிமானத்தையும் கொச்சைப் படுத்தும் வகையினதான பிரச்சாரத்தில் களமிறங்கியிருக்கின்றார்கள்.

துருக்கியை கிலாபாவின் தலை நகராகவோ, துருக்கியின் மீளெழுகையை கிலாபாவின் மீள் நிர்மாணமாகவோ, துருக்கியின் தலைவரை கலீபாவாகவோ, துருக்கிக்கான ஆதரவை கிலாபாவுக்கான பைஅத் ஆகவோ துருக்கிக்கு உள்ளே இருந்தோ, வெளியே இருந்தோ எவரும் சொல்லிக் கொள்ளாத போதும், அவ்வாறான ஒன்றை தமக்குள் உருவகித்துக் கொண்டு ‘அது அவ்வாறில்லை’ என்றவாறான பிரச்சாரத்தில் கச்சை கட்டி சப்பை கொட்டுகின்றனர். இது அவர்களது ஆழ்மனதின் பரிதவிப்பையே அரங்கேற்றிக் காட்டுகின்றது.

துருக்கி – முஸ்லிம் உம்மாவின் வானில் ஒரு நம்பிக்கை தரும் ஒரு ஒளிக் கீற்று. அது பிரகாசமாக பரிணமித்து விடக்கூடாது என்பதில் இப்னு ஸஊத்களும், ஆயத்துல்லாக்களும் ஆகாச அக்கறையோடு இருக்கின்றார்கள். மன்னராட்சியினதும், ஷீஆ மாசாலத்தினதும் மறைகரங்கள் நாம் அறியாதவை அல்ல.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW