“கல்யாணம் முடித்து மூன்று மாதமாயிற்றா… ?? முள்ளிநியூஸ்

“கல்யாணம் முடித்து மூன்று மாதமாயிற்றா… ??




-Izzathun Nisa-

மருத்துவபீடம் – கிழக்கு பல்கலைக்கழகம்

“கல்யாணம் முடித்து மூன்று மாதமாயிற்றா என்ன உடம்பு வைக்கவே இல்லையே??”

என் பெண்கள் சமூகத்திற்கு கிடைத்த சாபக்கேடான கேள்வி ஒன்று இது.

இப்படித்தான் எத்தனையோ கேடுகளை நலவுகளாக சமூகம் மாற்றியிருப்பது பேசப்பட வேண்டியதுதான் என்றாலும் இன்றைக்கு மேற்கூறப்பட்ட வினாவை கொஞ்சம் ஆராயலாம்.

எங்கள் சந்தோஷமான வாழ்க்கையை அளவிடும் ஒரு கருவியாக(?) அடையாளமிடப்பட்டிருப்பது உடலின் பருமன் என்பது கவலையெனினும் சொல்லப்பட வேண்டியது, குறிப்பாக எமது சமூகத்தில்.

அதிலும் திருமணத்திற்குப் பின்னான ஒரு பெண்ணிடம் பரவலாக கேட்கப்படும் ஒரு கேள்வி என்பதால் அவர்கள் சார்பாக சில விடயங்களை கூறி விடுகின்றேன்.

முதலாவது, இந்த கேள்வி ஒரு அப்பட்டமான பொறாமையின் வெளிப்பாடு. திருமணமாகி பல வருடங்களுக்கும் உங்கள் உடல் நிறையை நீங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடிகிறது என்றால் நீங்கள் மிகச்சிறந்த புத்திசாலிகளும் அதிஷ்டசாலிகளுமே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

திருமணமாகி பல பெண்கள் திடீரென உடல் எடை அதிகரிப்பது ஆரோக்கியமான ஒன்றே அல்ல. சாதாரணமாக குழந்தைப் பேறின் பின் ஏற்படும் உடல் அதிகரிப்பு இயற்கையானது. அது மருத்துவ ரீதியில் அவசியமானதும் கூட.

ஆனால், தவறான சாப்பாட்டு முறைகள், கட்டுப்பாடற்ற குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள், திருமணத்திற்கு முன்னதான ‘யுவதி’இன் இயக்க ஓட்டங்கள் ‘மனைவி’யாக வீட்டுக்குள் , கணவரின் பைக்கில் என தடைப்படுதல் போன்றன மூலமாக ஏற்படும் உடல் அதிகரிப்பு அபாயகரமானது. ஆனால் அது பிற்போக்குத்தனமாக வரவேற்கப்படுவதை நாம் புழுங்கிக் கொண்டே சிரிப்போடு ஏற்றுக் கொள்கிறோம்.

விழிப்பாயிருங்கள்.

உங்கள் உடல் நிறை அதிகரிப்புத்தான் நிச்சயமாக பின் தொடரும் உங்கள் அத்தனை நோய்களுக்கும் அடிப்படை என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததே.

ஆக, மாமியார் குடும்பத்தையும் சமூகக் கேள்விகளுக்கும் திருப்தியளிப்பதற்காகவென

‘அன்பால் பரிமாறப்படும் அத்தனையையும் சாப்பிடாமல்’ எங்கள் வாய்களைக் கட்டிக் கொள்வது ரொம்பவே அவசியம்.

என் நண்பிகளில் பலரைக் கண்டிருக்கிறேன்.

‘மரக்கறியா ஐயோ எனக்கு அலர்ஜி’

‘மீனா? எங்கள் வீட்டில் உம்மாவும் வாப்பாவும்தான் சாப்பிடுவாங்க.’ ‘எங்களுக்கு எப்பவுமே chicken or beaf தான் favourite’

இது அவர்களால் சொல்லப்படும் பெருமைக்குரிய வசனங்கள்.

இதுவல்லாமல்,

‘உனக்கு தெரியுமா, நான் chocolate சாப்பிட்றதே இல்ல’

‘எனக்கு புரியாணி பெரிசா interest இல்ல’

‘எனக்கு மரக்கறி இல்லாட்டி சாப்பாடே இல்ல’

‘நாங்க கடையில் parcel எடுக்கிறதே இல்ல. வீட்லதான் சமைப்போம்’

இப்படியான வசனங்களை சொல்பவராக நீங்கள் இருந்தால் கவலையே வேண்டாம்

நீங்கள் அதிஷ்டசாலிகள்தான்.!!

உங்கள் உடம்பு நிறையை எப்படி maintain பண்றீங்க என்று உங்களை துவைத்தெடுப்பார்கள்.
(இதை விட சந்தோஷம் நமக்கு வேண்டுமா என்ன )
வாய்க்கு கட்டுப்போடுவதே மிக முக்கிய தீர்வு.
பிள்ளைப்பேறின்மை,
இளவயது cholesterol,Pressure, sugar,Breast cancer,
காரணமின்றிய cancers
Asthma, varicose,
மாரடைப்பு,
திடீர் மரணம்,
மாதவிடாய் பிரச்சனை,
உடலுறவு பிரச்சனை,
மன அழுத்தம்,
Social inferiority என பட்டியல் ரொம்ம்ப பெரிசு.
கவலை என்னவென்றால், திருமணம் முடித்த எங்கள் சமூகத்துப் பெண்களுள் மெலிதான பெண்களை அரிதாகவே தேடிப்பிடிக்க வேண்டி இருக்கிறது.

வெளினாட்டில் இருக்கும் கணவர் ஆசையாய் அனுப்பும் பாதாமையும் பிஸ்தாவையும் வகைவகையான chocholate களையும் வயிறாற சாப்பிட்டுக் கொண்டே treadmill இல் ஓடுவது முட்டாள்தனமானதே.

Diet இருக்கிறேன் பேர்வழி என்று greentea and fruits only என ஆர்வக்கோளாறாய் ஓரிரு மாதங்கள் இருந்து விட்டு, குறைந்தது இரண்டாவது சமோசாவை தவிர்க்குமளவு mentality வரவில்லை என்றால் உங்கள் diet பம்மாத்தே.

சரி ஒருவழியாக timetable போட்டு நெருக்கடியான சூழலிலும் walking போய்க்கொண்டிருக்கும் அதே வேளை,

கல்யாண வீட்டிலும் உறவினர் வீட்டிலும் படைக்கும் அத்தனையையும் எப்படியாவது மொத்தமாய் சாப்பிட்டுவிட வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியே இன்னும் இருக்கின்றதென்றால், நீங்கள் walking போகாமல் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவதே சுகம்.

Oven, washing machine, pressure cooker என மாப்பிள்ளை மிகப் பூப்போலத்தான் உங்களுக்கு வசதிகளை செய்து தந்திருக்கிறார் என்றாலும் வீட்டில் ஒரேயொரு முருங்கை மரம் வளர்த்துத்தர அவரால் முடியவில்லை என்றால் நீங்களும் உங்கள் குழந்தைகளும் பாவம்.

வெள்ளிகிழமை special புரியாணி,
கிழங்கு பாபத், கொழுப்பு பார்சலோடு beach,
Vacation BBQ,
Chicken or Beaf கட்டாயமாக்கப்பட்ட lunch
இவற்றை பழக்கமாக கொண்ட நீங்களும் உங்கள் குழந்தைகளும்
week இல் குறைந்தது மூன்று தடவையேனும் பச்சைக் கீரை சுண்டல் அல்லது அவியலும்
சிறிய மீன் வகை கறியையும் விரும்பவே இல்லை என்றால், மன்னிக்கவும் நீங்கள் மிகப் பிழையான பாதையில் போய்க்கொண்டிருக்கிறீர்கள்.
Nafs’al ammara வில் இருந்து Nafs’al lawwama விற்கு மாறியே ஆக வேண்டும் நீங்கள்.
எம் சமூகத்தின் நிலமையும் வைத்தியசாலை ஆய்வுகளும் நோய் அதிகரிப்பு வீதங்களும் அதையே காட்டி நிற்கின்றது.

“எங்கள் நிலமைகளை நாங்களாக மாற்றிக் கொள்ளத் தயாராகதவரை அல்லாஹ் எங்களை மாற்றி விடப் போவதில்லை”. எது எப்படியோ சாப்பாட்டு விடயத்தில் கட்டாயம் follow பண்ண வேண்டிய law இது.

(பிழையான உணவு முறை என்ற ஒரு காரணமே இங்கு அலசப்பட்டுள்ளது. ஏனைய காரணங்களை ஒவ்வொன்றாக மெதுவாக அலசலாம்)                                                  இதனை நண்பர்களுடன் பகிரவும். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW