மீண்டும் தலைவராக றிஸ்வி முப்தி; உபதலைவர் அகார் முஹம்மத், செயலாளர் முபாறக் மௌலவி
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவராக அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி மீண்டும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இன்று கண்டி பெரிய பள்ளிவாயலில் இடம்பெற்ற நிர்வாக குழு தெரிவு கூட்டத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா நிர்வாக குழு உறுப்பினர்கள் வாக்களிப்பு மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜம்மியாவின் தலைவராக அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி , உப தலைவராக அஷ்ஷெய்க் அகார் முஹம்மது , செயளாலராக அஷ்ஷெய்க் முபாரக் மவ்லவி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW