ஜனாதிபதி - கூட்டு எதிர்கட்சி விஷேட சந்திப்பு நாளை முள்ளிநியூஸ்

ஜனாதிபதி - கூட்டு எதிர்கட்சி விஷேட சந்திப்பு நாளை




கூட்டு எதிர்க் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான விசேட பேச்சுவார்த்தையொன்று நாளை (25) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பேச்சுவார்த்தையில், கூட்டு எதிர்க் கட்சி சார்பாக கலந்து கொள்வதற்கு மஹிந்தானந்த அலுத்கமகே, ஜோன்ஸ்டன் பிரணாந்து ஆகியோருக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட கூட்டு அரசாங்கத்தின் காலத்தை இன்னும் மூன்று வருடங்களுக்கு நீடிக்க கடந்த வாரம் அரசாங்கம் தீர்மானித்தது.

இது தொடர்பிலும், எதிர்வரும் 28 ஆம் திகதி கண்டியில் இடம்பெறவுள்ள நடைபவனி பற்றியும் ஜனாதிபதி இச்சந்திப்பின் போது கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW