எல்லை தாண்டிய ஐந்து மீனவர்கள் கைது
எல்லை தாண்டி வந்ததாக கூறி இராமேசுவரம் மீனவர்கள் ஐவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இராமேசுவரம் பகுதிகளில் இருந்து 500 விசைப் படகுகளில் சுமார் 3,000 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் சிலர் நெடுந்தீவு பகுதியில் வலைகளை விரிந்து மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.
இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் குட்டி கப்பல்களில் அந்த பகுதியில் ரோந்து வந்தனர். அவர்கள் அங்கு மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை பார்த்து எச்சரித்ததோடு, அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தனர் என, தமிழக ஊடகமான மாலை செய்தி வெளியிட்டுள்ளது.
பின்னர் அவர்கள் இராமேசுவரத்தை சேர்ந்த நம்முரத்தினம் என்பவர் படகில் இருந்த மீனவர்கள் கணேசன், வேலாயுதம், மாரிமுத்து, தனம், சாரதி ஆகிய 5 மீனவர்களையும் படகுடன் சிறைப்பிடித்து சென்றனர். சிறைப்படிக்கப்பட்ட 5 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்ட சென்றனர் எனத் தெரியவந்துள்ளது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW