பெண்ணை அணைக்க முயன்றவருக்கு தர்ம அடி: திருகோணமலையில் சம்பவம்!!

பட்டப்பகலில் வீதியால் சென்ற யுவதி ஒருவரை பாலியல் சேஷ்டை செய்த இளைஞன் பொதுமக்களால் தாக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை ஏகாம்பரம் வீதி கேணியடியில் நேற்று (01) மாலை வீதியால் சென்று கொண்டிருந்த யுவதி ஒருவரை முச்சக்கர வண்டியில் வந்த இளைஞன் ஒருவர் கட்டியணைத்து முத்தம் கொடுக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது, எதிர்பாராவிதமாக இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த யுவதி கூச்சலிட வீதியால் வந்த பொதுமக்கள் இளைஞனை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இளைஞனைக் கைது செய்த பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பூரில் 9வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்
03-07-2016
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று உத்தரவிட்டார்.
மூதூர், பாட்டாளிபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதோடு மனைவியோடு ஏற்பட்ட தகராறு காரணமாகவே சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உறவுக்காரர் எனவும், சிறுமியின் தாய் தந்தை காட்டுக்கு விறகு எடுக்கச் சென்ற நிலையிலே சந்தேக நபர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் தாய், தந்தை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, குறித்த சந்தேக நபரை புதன்கிழமை மாலையில் மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW