துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி
திக்வெல்ல - நாவரஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துக்க வீடொன்றில் கலந்து கொண்டு பின்னர் வீடு திரும்பிய வேளையே, குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திக்வெல்ல - ஊருகமுவ பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் யார் என இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW