அதிவேக வீதியில் விபத்து - 9 பேர் காயம்
தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.
கொட்டாவ நோக்கி பயணித்த வேன் ஒன்று சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக, அதிவேக வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது வேன் சாரதி உள்ளிட்ட ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் களுத்துறை - நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் இரு பெண்கள் மற்றும் மூன்று சிறுவர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.