காதலித்த மறுத்த பெண் கழுத்தறுத்துக் கொலை - இந்தியாவில் மற்றுமொரு சம்பவம் முள்ளிநியூஸ்

காதலித்த மறுத்த பெண் கழுத்தறுத்துக் கொலை - இந்தியாவில் மற்றுமொரு சம்பவம்





தெலுங்கானா மாநிலத்தில் காதலிக்க மறுத்த 18 வயது இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவத்தில் கல்லூரி மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் அதிபாபாத் மாவட்டம் பைன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் சருபாய்.

இவரது மகள் சந்தியா (வயது 18). இவர் தாயுடன் சேர்ந்து பீடி சுற்றும் வேலை பார்த்து வந்தார்.

இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மகேஷ். தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் சந்தியாவை ஒருதலையாக காதலித்து வந்தார். தனது காதலை சந்தியாவிடம் தெரிவித்தார். அவர் காதலிக்க மறுத்து விட்டார். ஆனால் சந்தியாவை ஒரு ஆண்டாக தொடர்ந்து காதலிக்குமாறு தொல்லை கொடுத்தார்

நேற்று மதியம் சந்தியா வீட்டு அருகே உள்ள கடைக்கு சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த மகேஷ் அவரிடம் மீண்டும் காதலிக்கும்படி வற்புறுத்தினார்.

அப்போது தனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. என் பின்னால் சுற்றாதே என்று சந்தியா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தியா பின்னால் சென்று அவரது கழுத்தை அறுத்து விட்டு ஓடிவிட்டார்.

இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சந்தியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மகேஷை தேடினர். மாலையில் அவர் பொலிசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW