ஞாயிறு தினகரனில் இணை ஆசிரியர் வெற்றிடம்..! — முஸ்லிம்களின் கவனத்திற்கு.. முள்ளிநியூஸ்

ஞாயிறு தினகரனில் இணை ஆசிரியர் வெற்றிடம்..! — முஸ்லிம்களின் கவனத்திற்கு..





லேக்ஹவுஸ் நிறுவன வெளியீடான தினகரன் வாரமஞ்சரியில் இணை ஆசிரியருக்கான வெற்றிடம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் தொடக்கம் இந்த வெற்றிடம் திட்டமிட்ட அடிப்படையில் நிரப்பப்படாது உள்ளதாக குறிப்பிடப்படுகிறது .

இணை ஆசிரியராக கடமையாற்றிய முஸ்லிம் ஒருவர் , முஸ்லிம் அரசியல் பிரமுகர் ஒருவரின் ஊடக பிரிவுக்கு விடுவிக்கப்பட்டதை அடுத்தே இந்த வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

தினகரனைப் பொறுத்தவரை — தினகரன் , பிரதம ஆசிரியர் என்ற ஒருவரின் நிர்வாகத்தின் கீழேயே கடந்த சில வருடங்களுக்கு முன்பிருந்தே செயற்பட்டு வந்துள்ளது.

பின்னர், தினகரன் நாளிதழ் — தினகரன் வாரமஞ்சரி என பிரிக்கப்பட்டதையடுத்து இங்கு கடமையாற்றிய முஸ்லிம் ஊடகவியலாளர்கள் தமது தனிப்பட்ட கௌரவம், மரியாதை நிமித்தமாக தினகரன் நாளிதழுடன் தங்களை இணைத்துக் கொண்டனர் .

தினகரன் வாரமஞ்சரியில் இணைந்து , இணை ஆசிரியர் என்ற பதவியை பெற்றுக்கொள்ள எவரும் முன்வராத சூழ்நிலையில்தான், முன்னர் குறிப்பிட்ட நபரை முஸ்லிம் ஊடகவியலாளரின் அங்கத்துவத்தின் அவசியத்தை கருத்திற் கொண்டு வாரமஞ்சரியில் நியமிக்க முடிவாகி , செயற்படுத்தப்பட்டது.

இப்போது, தினகரன் வாரமஞ்சரியில் ஏற்பட்டுள்ள இணை ஆசிரியர் வெற்றிடத்திற்கு மீண்டும் முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவரை நியமிக்க வேண்டிய கடமைப்பாடு ஏற்பட்டுள்ளது என தினகரனில் கடமையாற்றும் நண்பர்கள் வெளிப்படையாக முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் ஊடக அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களிடம் வற்புறுத்தியுள்ளனர்.

தினகரன் நாளிதழில் கடமையாற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களைக் கொண்டோ அல்லது ஏனைய பத்திரிகைகளில் கடமையாற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களைக் கொண்டோ இந்த வெற்றிடத்தை உடன் நிரப்புமாறு அவர்கள் கோரி நிற்கின்றனர்.

தினகரன் நாளிதழ், தினகரன் வாரமஞ்சரி …பிரதம ஆசிரியர் ஒருவரின் நிர்வாகத்தின் கீழ் ” தினகரன்” என செயற்பட்ட காலகட்டத்தில் கடமையாற்றியவன் என்ற ரீதியில் , இப்போது முன்வைக்கப்பட்டுள்ள இந்த வற்புறுத்தலானது அவசரமாக சிந்தித்து செயற்படுத்த வேண்டிய ஒன்றாகும்..

ஊடக அமைச்சருக்கோ அல்லது முஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடமோ தத்தமது சுயநலத்திற்காக பிழையான அல்லது இட்டுக்கட்டிய வார்த்தைகள் ஒப்புவிக்கப்படாத வரை இந்த நியமனம் என்பது சிறிய விடயம்.

இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளில் இதுவும் ஒன்று.

லேக்ஹவுஸ் நிறுவனம் என்பது அரசின் கட்டுப்பாட்டீலுள்ள நிறுவனமாகும்.. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW