போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு மரண தண்டனை - ஜனாதிபதி

இலங்கையில் போதை வில்லைகள், ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக மரண தண்டனையை செயற்படுத்துவது பொருத்தமானது என தான் யோசனை முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று முதல் நாட்டில் விவாதத்தை ஏற்படுத்துமாறு யோசனை முன்வைப்பதாகவும் இதன் மூலம் வெளிப்படும் மக்களின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW