சீ.ஐ.டி.யின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவைப் படுகொலை செய்யத் திட்டம்?
குற்றப் புலனாய்வுப் பொலிஸ்பிரிவின் பணிப்பாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவைப் படுகொலை செய்வதற்கான திட்டமொன்று குறித்து புலனாய்வுத் தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த காலத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய படுகொலைச் சம்பவங்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமான புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பல்வேறு அழுத்தங்களின் மத்தியிலும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி வருகின்றார்.
இதன் காரணமாக பாதிப்புக்குள்ளாகி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் பாதாள உலகக்கும்பல் பிரமுகர்கள் சிலர் ஒன்றிணைந்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவைப் படுகொலை செய்வதற்குத் திட்டம் தீட்டியுள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
புலனாய்வுப் பிரிவினருக்கு இத்தகவல் கிடைத்தவுடன் ஷானி அபேசேகர எச்சரிக்கப்பட்டு, அவரது பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு மூன்று விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
வர்த்தகர் முஹம்மத் சியாம் படுகொலை, வசீம் தாஜுதீன் படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் போன்ற சர்ச்சைக்குரிய சம்பவங்கள் குறித்து ஷானி அபேசேகரவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல்வேறு அழுத்தங்களின் மத்தியிலும் இச்சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல வர்த்தகர் முஹம்மத் சியாம் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
வசீம் தாஜுதீன் படுகொலைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலை செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW