பாடசாலைகளிலிருந்து நல்லிணக்கத்தை உருவாக்குங்கள்
பாடசாலைகளிலிருந்து நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பதுளை ஹாலிஎல பிரதேசத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி நாட்டின் தேசிய ஒற்றுமை சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பாடசாலை மாணவர்களின் ஊடாக ஏற்படுத்த வேண்டியது அவசியமானது.
நாட்டில் வாழும் அனைத்து மக்களிடையேயும் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்பி நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.
இதேவேளை சந்தேகமின்றி வாழக்கூடிய சூழ்நிலையை உறுதி செய்யும் விரிவான தேசிய திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW