திருடர்களுக்கு தான் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை-ஜனாதிபதி
திருட்டு,மோசடிகளுக்கு தான் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி
தெரிவித்துள்ளார்.
இன்று அரசியலுக்கு தேவையானவர்கள் தர்மசிறி சேனநாயக்க போன்றவர்கள் என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
சேனநாயக்கவை பின்பற்றுபவர்கள் இன்று அரசியலில் எவரும் இல்லை என்றும் ஜனாதிபதி
சுட்டிக்காட்டியுள்ளார்.
வரகாபொலயில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத்
தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட வேண்டும் என கடந்த ஆட்சியாளர்களின்
கொள்கையாக இருந்ததாகவும்,ஆனால் அவர்கள் இன்று அதனை ஏன் எதிர்க்கின்றார்கள்
என்றும் தெரியவில்லை என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW