அலிபாபாவுக்கும் 40 திருடர்களுக்கும் மீண்டும் நாட்டை ஒப்படைப்பதா – அதிரடி கேள்வி முள்ளிநியூஸ்

அலிபாபாவுக்கும் 40 திருடர்களுக்கும் மீண்டும் நாட்டை ஒப்படைப்பதா – அதிரடி கேள்வி





திருடர்களுக்கு தண்டனை வழங்கும்போது அதனை அரசியல் பழிவாங்கல் என கூறுவது கடந்த காலங்களில் நாட்டு மக்களை ஏமாற்றிப் பிழைத்தவர்களே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவத்தகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த, பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியை சீர்படுத்தாமலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தல் ஒன்றிற்காக சென்றார் எனவும், தாம் அந்த சவாலுடனேயே ஆட்சிக்கு வந்ததாகவும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமது ஆட்சியில் கடந்த ஒன்றரை வருடத்தை பொருளாதார ஒழுங்குபடுத்தலுக்காக தாம் பயன்படுத்தியதாகவும், தற்போது அபிவிருத்தியில் கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் அரசின் புதிய திட்டத்திற்கு அமைய கண்டி, குருநாகல், கொழும்பு மற்றும் அம்பந்தொட்ட வரை அபிவிருத்தி வலைப்பின்னல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு திருடாமல் கடமையை முன்னெடுத்துச் சென்றதால்தான் தம்மால் இவற்றையெல்லாம் இந்த குறுகிய ஆட்சியில் செய்ய முடிகிறது என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மீண்டும் திருடர்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு இலங்கையை சூறையாட அனுமதிப்பதா அல்லது அந்த அலிபாபாவும் 40 திருடர்களுக்கும் நல்ல பதிலடி கொடுத்து நாட்டை காப்பாற்றுவதா என்பதை இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW