மஹிந்தவிடம் இருந்து பிரியும் பிரபல ஆதரவாளர்கள் – இன்று தீர்மானம் – மைத்திரியின் ராஜதந்திரம்
விசேட சந்திப்பு ஒன்றிற்காக ஜனாதிபதியிடம் இருந்து தமக்கு அழைப்பு வந்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கும் இடையிலான இந்த சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு ஜனாதிபதியிடம் இருந்து இவ்வாறு அழைப்பு வந்துள்ளதாக, கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரித்துள்ளார்.
எனினும் அவ்வாறான அழைப்பு எதுவும் தனக்கு வரவில்லை என, கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனிப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள யோசனை ஒன்று தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவே ஜனதிபதியை சந்திக்க அனுமதி கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜாதிபதிக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கும் இடையிலான இன்றைய சந்திப்பு அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள யோசனை தொடர்பானது அல்ல என, சில உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எமது செய்தி ஆசிரியர்கள் குழாமுக்கு கிடைத்துள்ளன.
அத்துடன் எதிர்வரும் 28 ஆம் திகதி கண்டியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த கூட்டு எதிர்க்கட்சியின் பேரணி தொடர்பில், இன்று ஜனாதிபதியை சந்தித்த பின் தாம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடவுள்ளதாக, கூட்டு எதிர்க்கட்சியின் குமார வெல்கம உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரித்துள்ளனர்.
மேலும் கூட்டு எதிர்க்கட்சியின் பேரணியில் கலந்துகொள்ளக்கூடாது என்ற நிலைப்பாடொன்று இலங்கை கொமினியுட்ஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ளதாகவும், தமது தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் எனவும், அந்தக்கட்சியின் தலைவர் டி.யு குணசேகர தெரிவித்துள்ளார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW