கொழும்புக்கு வெளியே நகர்த்தப்படும் போதைப்பொருள் களஞ்சியங்கள் முள்ளிநியூஸ்

கொழும்புக்கு வெளியே நகர்த்தப்படும் போதைப்பொருள் களஞ்சியங்கள்



பாரியளவிலான போதைப் பொருள் களஞ்சியசாலைகளை கொழும்பு நகருக்கு வெளியே நகர்த்துவதில் போதைப்பொருள் மாபியாக் கும்பல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


களுத்துறை பிரதேசத்தில் அண்மையில் ஐம்பது இலட்சம் பெறுமதியான ஹொகேய்ன் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நகரில் பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் திடீர் சோதனைகளை மேற்கொள்வதன் காரணமாக பாரியளவிலான போதைப்பொருளை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு பாதுகாப்பான சூழல் இல்லாமல் போயுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு நகருக்கு தொலைவில் உள்ள பிரதேசங்களில் போதைப்பொருட்களை களஞ்சியப்படுத்தி அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சுங்கப் பிரிவினர் ஊடாகவே நாட்டினுள் பெருமளவான போதைப்பொருட்கள் எடுத்து வரப்படுவதாகவும், போதைப்பொருள் வர்த்தகர்களுடன் சுங்கப்பிரிவினர் ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவும் குறித்த விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

                                         இதனை நண்பர்களுடன் பகிரவும்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW