ஒரு இனம் மட்டும் வாழ வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த பாதயாத்திரை முள்ளிநியூஸ்

ஒரு இனம் மட்டும் வாழ வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த பாதயாத்திரை


கூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரை இனவாதத்தை நோக்கமாக
கொண்டதென பிரதி அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று எதிரணியின் பாதயாத்திரை தொடர்பிலாக அரசாங்கத்தின் நிலைப்பட்டினை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

ஒரு இனம் மட்டும் வாழ வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது.

எனவே இந்த பாதயாத்திரையானது இனவாதத்தையும் வன்முறையையும் மீண்டும் வலுப்படுத்துவதற்கான உபாய மார்க்கம் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு

அதேநேரம் பாதயாத்திரையில் பங்கேற்பவர்களின் கட்சி உறுப்புரிமையும் தொகுதி அமைப்பாளர்கள் பதவியும் பறிக்கப்படும். அவை இரண்டும்தான் பாதயாத்திரையின் பலன் என்றும் அவர் குறிபிட்டார்.
                                        இதனை நண்பர்களுடன் பகிரவும்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW