நாட்டில் பத்து அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைகள் குறைக்கப்படும்

நாட்டில் பத்து அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசு மானியம் வழங்கவுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது என்று அரசாங்கம் அறிவித்தது.
நாட்டின் தலைவிதியை தனியொரு குடும்பம் தீர்மானிக்கும் யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நெகி
ழ்வுத்தன்மையான ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அரசாங்கம் தெரிவித்தது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன் கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போதே அரசாங்கம் இந்த அறிவிப்பைவெளியிட்டது.
இங்கு அமைச்சரவை இணைப்பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்ன குறிப்பிடுகையில்
கடந்த காலங்களில் நாட்டின் தலைவிதியை தனியொரு குடும்பமே தீர்மானித்தது. ஆனால் இன்று ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் குடும்ப ஆதிக்கம் கிடையாது.
மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து நெகிழ்வுத் தன்மையுடன் தீர்மானங்களை மேற்கொள்ளும் அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் எவ்வளவு தொகைக் கடன் வாங்கினார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கும் பல காலங்கள் கடந்தன.
மக்கள் வங்கி, இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி என உள்ளூர் வங்கிகளில் அதிக வட்டிக்கு கடன் பெறப்பட்டது.
இக்கடன்கள் கணக்கில் பதியப்படவில்லை. முன்னாள் நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர அனைத்தையும் நூற்பந்தைப் போன்று சிக்கலாக்கியிருந்தார்.
இதனை அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஏற்றுக்கொண்டார்.
அன்று நூற்றுக்கு 96 வீதம் கடன் வாங்கியுள்ளனர்.
அந்தக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு தற்போதைய அரச வருமானம் போதுமானதாக இல்லை.
எனவே இன்று எமது அரசு ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கியிடம் கடன்களை கேட்டுள்ளது. அக்கடன்கள் கிடைக்கப்பெறவுள்ளன. பொருளாதார நெருக்கடிக்கு நாம் படிப்படியாக தீர்வுகள் பெற்றுக்கொள்வோம்.
இன்று ஒரு சிலர் வற்வரியை பயன்படுத்தி இன்றைய ஆட்சியை கவிழ்க்க முனைகின்றனர். அந்தக் கனவு ஒரு போதும் நிறைவேறப் போவதில்லை.
இவ்வருட இறுதிக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அனைத்தும் குறைக்கப்பட்டு மக்களின் நலன்புரிகள் அதிகரிக்கப்படும்.
கடந்த காலத்தில் நாட்டில் தீர்மானங்களை தனியொரு குடும்பமே தீர்மானித்தது. இன்று அந்த யுகத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளதோடு அரசாங்கமும் அமைச்சரவையும் இணைந்தே நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தீர்மானங்களை எடுக்கின்றது.
ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஜனநாயக ரீதியில் கேள்விக் கேட்பதற்கும் உரிமை இருக்கவில்லை. இன்று அந்நிலை மாறியுள்ளது. மக்கள் ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே குழப்பமடைய வேண்டாம். அமைதியாயிருங்கள். அனைத்தும் நல்ல படியாக நடக்கும் என்றார்.
அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிடுகையில்
பத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு அவற்றிற்கு மானியம் வழங்க அரசு தீர்மானம் எடுத்துள்ளது. இது தொடர்பாக விரைவில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்.
நாட்டில் சில குழுக்கள் வற்வரி தொடர்பில் பிழையான பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை பிழையாக திசை திருப்புகின்றன.
இதன் பின்னணியில் அரசு கவிழ்ப்பு சதித்திட்டம் இருக்கிறதா? என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களுக்கோ பொது மக்களின் போக்குவரத்து சேவைகளுக்கோ வற்வரி அறவிடப்படுவதில்லை.
இவ்வரி தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இதற்கமைய வற்வரி தொடர்பில் கவனம் செலுத்த விசேட அமைச்சர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW