பஸ்ஸினுள் 17 வயது சிறுமியின் கைங்கரியம்.. குடும்பத்துடன் சிக்கினர்.
இது தொடர்பில் சாரதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பஸ் சுன்னாகம் பஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டது. பொலிஸார் வரவழைக்கப்பட்டு பஸ்ஸில் இருந்த அனைவரும் சோதனையிடப்பட்டதில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் பொருட்களை திருடி தனது மர்ம உறுப்பில் மறைத்து வைத்துள்ளமை தெரியவந்தது.
பின்னர் குறித்த பெண்ணுடன் வந்த தாய் மற்றும் தகப்பனை கைது செய்து விசாரணை செய்ததில் இவர்கள் மூவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு சாவகச்சேரி பகுதியில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளதாகவும் இவர்கள் திருடுவதற்காகவே யாழ்ப்பாணம் வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
