காதலனிடமிருந்து விலகிக் கொண்டால் 50 இலட்சம் ரூபா... இலங்கையில்தான்.

தனது காதலியிடமிருந்து நிரந்தரமாக விலகிக் கொள்வதற்காக, அவருக்குக் கடும் மரண அச்சுறுத்தல்கள் அடங்கிய குறுஞ்செய்திகளை அனுப்பிய கள்ளக் காதலனொருவரையும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் அழகுக்கலை பெண் நிபுணரொருவரையும், பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று, பிலியந்தல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தன்னுடைய காதலனிடமிருந்து விலகிக்கொள்ளுமாறும் அவ்வாறு விலகிக்கொண்டால் 50 இலட்சம் ரூபாயைத் தருவதாகவும், விலகாவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும், காதலனின் பழைய காதலி என்று கூறிக்கொள்ளும் பெண்ணொருவர், தனக்கு குறுஞ்செய்தி மூலம் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக, அச்சுறுத்தலுக்குள்ளான பெண், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.
இந்த மூவரையும், தனித்தனியே பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துள்ள பொலிஸார், அவர்களிடம் நீண்ட நேர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போதே, தன்னுடைய காதலியை, தன்னிடமிருந்து விலக்கிக்கொள்ள உதவுமாறு, காதலனான சந்தேகநபர், மேற்படி அழகுக்கலை நிபுணரின் உதவியை நாடியுள்ளார் என்பதும் அதற்காக அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளதென்பதும், பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
தனது காதலியின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட அலைபேசி இணைப்பு அட்டையைப் பயன்படுத்தியே, மேற்படி அச்சுறுத்தல் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட காதலனும் அவருக்கு உதவிய அழகுக்கலை நிபுணரும், பொலிஸ் நிலையச் சிறைக்கூண்டில் அடைக்கப்பட்ட போது, காதலனின் கைகளைப் பிடித்துக்கொண்டு, அவரது காதலி அழுது புலம்பியுள்ளார்.
சந்தேக நபரான காதலன், கல்கிஸை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவர், ஏற்கெனவே திருமணம் முடித்தவர் என்றும், அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர் எனவும், பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW