மேலதிக வகுப்பு செல்வதாக கூறி ஆண்களுடன் சுற்றும் இளம்பெண்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் பிரதேசம்

மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி, காதலனுடன் சுற்றித் திரிந்த இளம் பெண்ணை கைதுசெய்துள்ளதாக நிவித்திகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிவித்திகல பல்லாமல எல்ல பிரதேசத்தில் சுற்றித் திரிந்த போது இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, குறித்த பிரதேசத்தில் சுற்றித் திரிந்த இளம் பெண்கள் பலர் கைதுசெய்யப்பட்டு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினார்.
இதேவேளை தமது பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அவர்கள் செல்லும் இடங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் பெற்றோருக்கு பொலிஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW