உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ACMC பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்
(2016-08-15) எதிர் வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும், முன்னால் கிண்ணியா நகர சபை தலைவருமான சட்டத்தரணி ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார்.
தம்பலகமம், சிராஜ்நகர் பகுதியில் கட்சி முக்கியஸ்தகர்களுடனான சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) மாலையில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சி அதிகரித்து வருகின்ற நிலையில் எதிர்வருகின்ற காலங்களில் கட்சியின் வளர்ச்சியை அனைவரும் ஒன்றினைந்து முன்கொண்டு செல்ல வேண்டும் கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் பின்னால் மக்கள் இணைந்து கொண்டே இருக்கின்றார்கள் எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் நாட்டில் பெரும்பாலான அனைத்து பிரதேசங்களிலும் மக்கள் பிரதிநிதிகளை தேர்தல் களத்தில் இறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்காக வேண்டி அனைவம் பூரண ஒத்துழைப்புகளை வழங்கி கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW