பெண்களின் புகைப்படங்களை வைத்து அவர்களை துன்புறுத்திய புத்தளத்து இளைஞன் சைபர் கிரைம்ஸ் பொலீசாரால் கைது..!! முள்ளிநியூஸ்

பெண்களின் புகைப்படங்களை வைத்து அவர்களை துன்புறுத்திய புத்தளத்து இளைஞன் சைபர் கிரைம்ஸ் பொலீசாரால் கைது..!!



பெண்களுடன் பேசி பழகி, அவர்களுடைய புகைப்படங்களை திருடிக்கொண்டு நீண்ட நாட்களாக அவர்களை துன்புறுத்தி வந்த இளைஞன் ஒருவனை சீ.ஐ.டி யினர் புத்தளத்தில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞனால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாவரும் ஒருவகையில் அவனுடைய உறவினர்கள் எனவும் அறியமுடிகின்றது.

இந்த இளைஞன் பெண்களின் புகைப்படங்களை வைத்து அவர்களை மிரட்டி வந்துள்ளான். அவனது திட்டம் ஒன்றும் பலிக்காதமையால் வெறுப்படைந்து அவர்களது புகைப்படங்களையும் வேறு சில ஒலி வெட்டுக்களையும் முகநூலில் பகிரங்கப்படுத்தி உள்ளான்.

பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாக கொழும்பில் உள்ள சைபர் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று புத்தளத்திற்கு வருகைத்தந்த சீ.ஐ.டி.யினர் குறித்த இளைஞனின் வீட்டை முற்றுகையிட்டு அவனை கைது செய்துள்ளனர்.

இதன்போது, அவனது கணினியில் பல பெண்களின் புகைப்படங்கள் காணப்பட்டதோடு, நூற்றுக்கணக்கான இறுவெட்டுக்களையும் உளவுத் துறையினர் கைப்பற்றி உள்ளார்கள். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW