கிரிமினல் லோயர் நதீஹா அப்பாஸுக்கு புத்தளம் நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தல்..!! என்ன நடந்தது..? முள்ளிநியூஸ்

கிரிமினல் லோயர் நதீஹா அப்பாஸுக்கு புத்தளம் நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தல்..!! என்ன நடந்தது..?


”பண்பாடற்றவர்களை தண்டிக்கவும் முடியும், மன்னிக்கவும் முடியும் ” இது புத்தளம் நீதி மன்றத்தில் நிறுவப்பட்ட புதிய தத்துவம். ஒரு சுவாரிசியமான பிள்ளை பராமரிப்பு தொடர்ன வழங்கு ஒன்றின் முடிவுரை இது.

விவாகரத்துப் பெற்ற பெற்றோர் இருவர் பிள்ளையின் பராமரிப்பு தொடர்பாக புத்தளம் நிதி மன்றில் சட்ட யுத்தம் நடத்தியபோது பிள்ளை சட்டரிதியான தந்தையின் பாதுகாப்பில் பிள்ளை விடப்பட வேண்டும் என சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் பிள்ளையின் தந்தை சார்பாக வாதாடியுள்ளார். தாய் வேறு திருமணம் செய்து பிள்ளையை தனது பெற்றேரின் பொறுப்பில் விட்டுள்ளதால் பிள்ளையின் பராமரிப்பு தன்னிடம் விடப்பட வேண்டும் என்று கூற தாய்க்கு எந்த நியாயமும் இல‌லை என வாதாடினார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளின் அறிக்கையும் பிள்ளை தாயின் பராமரிப்பில் விடப்படுவதையே சிபாரிசு செய்திருந்தது. ஆயினும் பிள்ளையின் தாய் வேறு திருமணம் செய்திருப்பதை அடிப்படையாகக் கொண்டு தனது வாதத்தை சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் நடாத்தியபோது சிறவர் பாதுகாப்பு அதிகார சபையின் விதற்புரையை பொருட்படுத்தாது பிள்ளை தந்தையிடம் பிள்ளை ஒப்படைக்கப்பட வேண்டும் என நீதி மன்றம் தீர்ப்பளித்து.

நீதி மன்றத் தீர்பைத் தொடர்ந்த பாட்டியிடம் இருந்த பேத்தி தந்தையால் பிடுங்கி எடுக்கப்பட்டுள்ளது. பேத்தியை இழக்கத் தயாராக இல்லாத பாட்டியும். பாட்டனும் நீதிமன்ற வளாகத்துள் வைத்து சட்டத்தரணி நதிஹா அப்பாஸை சகித்துக் கொள்ள முடியாத தூசனை வார்தைகளால் திட்டி அச்சுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் சக சட்டத்தரணிகளால் நீதவானின் அவதானத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது பிள்ளையின் தாய், பாட்டன், பாட்டி ஆகிய மூவரையும் உடனடியாகக் கைது செய்யும் உத்த‌ரவைப் பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் 24.08.2016 அன்று நடந்துள்ளது.

சமபவத்தைத் தொடர்ந்து அரசியல் பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புக்களும் சட்டத்தணி நதீஹா அப்பாஸுக்குக் கிடைத்தள்ளது. சம்பவம் புத்தளம் நீதி மனற்தின் சட்டத்தரணிகள் குழுமத்தை முழமையாக பாதிப்பதால் அது பற்றி சட்டத்தரணிகள்தான் முடிவு செய்ய வேண்டும் என நதிஹா அப்பாஸ் அவர்களுக்குத் தெரிவித்துள்ளார்..

விவகாரம 26.08. 2016 அன்று நீதவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது சம்பந்தப்பட்டவர்களால் ஏற்கனவே பிணையாக வைக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாவை அரசுடமையாக்கி அதில் 90 ஆயிரத்தை சட்டத்தரணி நதீஹா அப்பாஸுக்கு வழங்க வேண்டும் எனத் தீர்பபளிக்கப்பட்டது.

நிர்கதியான நிலையில் நின்ற அந்தக் குடும்பத்தின் நிலையைக் கண்டு தனது சட்டத்தரணி குழுமத்துடன் கலந்து பேசி அந்த 90 ஆயிரத்தையும் மீண்டும் அந்தக் குழும்பத்துக்கு திருப்பிக் கொடுத்துவிடத் தீர்மானித்து பணம் முழமையாக அந்த குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.

தனது தந்தையின் வயது மதிக்கத்தக்க தாடி, ஜுப்பாவில் காணப்பட்ட தாயி பண்பாடு தெரியாமல் நடந்து கொண்டதை தண்டிக்கவும் முடியும்,மனிதாபினமானத்தோடு மன்னிக்கவும் முடியும் என்பதை இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

முந்திய தினம் சட்டத்தரணி நதீஹா அப்பாஸை கேவலமாகத் திட்டித் தீர்த்த குடும்பம் அவரை அன்போடு ஆரத் தழுவி தனது நன்றிக் கட‌னைத் தெரிவித்துக் கொண்டது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW