கிழக்கு மாகாணாத்தில் பட்டதாரிகளின் வயதெல்லை 35லிருந்து 45ஆக அதிகரிப்பு. முள்ளிநியூஸ்

கிழக்கு மாகாணாத்தில் பட்டதாரிகளின் வயதெல்லை 35லிருந்து 45ஆக அதிகரிப்பு.


கிழக்கு மாகாணத்தில், பட்டதாரிகளின் நியமனங்களுக்கான வயதெல்லையை 35 இலிருந்து 45 ஆக கூட்டுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை இன்று வியாழக்கிழமை (25) நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் சபை நடவடிக்கைகள் மாகாண சபையின் அவைக் கேட்போர் ஆரம்பித்த போது முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் இரா. துரைரெட்ணம் ஆகியோர் மூலம்,
இது தொடர்பான அவசரப் பிரேரணை சமரப்பிக்கப்பட்டது.

இப்பிரேரணையை விவாதமின்றி ஏகமனதாக நிறைவேற்றுவதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கிணங்க இங்கு விவாதத்துக்கு இடமில்லை என சந்திரதாச கலப்பதி சபையில் அறிவித்தார்.

இந்த வயது எல்லையைக் கூட்டுவதற்காக தான் எடுத்த நடவடிக்கையை விவரித்த முதலமைச்சர் நஸீர் அஹமட், அதற்கு 35 இலிருந்து 40 ஆக உயர்த்த ஆளுநரின் அனுமதி கிடைக்கப்பெற்றதாகத் தெரிவித்தார்.

மீளவும் அதனை 45 ஆக உயர்த்துமாறும் இந்நடைமுறையை தொடர்ந்து 5 வருடத்துக்கு கிழக்கு மாகாணத்தில் கடந்த கால நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இச்செயற்முறையில் வைக்குமாறும் கோரியதாகவும் அது தொடர்பான பிரேரணையை சபையில் நிறைவேற்றவும் முதலமைச்சர் கோரினார். இதனையடுத்தே பிரேரணை நிறைவேற்றப்பட்டது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW