இலங்கையில் காணப்படும் ஆக்கிரமிக்கும் இனங்களை பாதுகாப்பது முகாமை செய்தல் தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் இலங்கையில் காணப்படும் ஆக்கிரமிக்கும் இனங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் முகாமை செய்தல் தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள்,சமூக சார் அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்குமாக இன்று வியாழக்கிழமை (25) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :நாட்டில் சுற்றுச்சூழலின் தாக்கங்கள் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றது இதனை கருத்திற்கொள்ளப்பட வேண்டும் இலங்கையில் காணப்படுகின்ற சுற்றாடல் சூழல் வளங்களை அழிப்பதால் மண்ணரிப்பு,வெள்ளப்பெருக்கு போன்ற பாரிய அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது.
இந்த சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்களை விழிப்புணர்வூட்டி தெளிவுபடுத்த வேண்டும் இது ஊடகங்களிலும்,ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும். சூழலை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வளப்படுத்த வேண்டும்.இயற்கை வளங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW