குருநாகல் மும்மன்ன கிராமத்து முஸ்லிம்கள் பாதுகாப்பு அச்சத்தில் முள்ளிநியூஸ்

குருநாகல் மும்மன்ன கிராமத்து முஸ்லிம்கள் பாதுகாப்பு அச்சத்தில்




மேற்படி பிரதேசத்தில் இன்று மாலை பொதுபலசேனா அமைப்பு ஏற்பாடு செய்துள்ள அமைப்பின் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு அதன் செயலாளர் ஞானசாரத் தேரர் உரையாற்றவுள்ளளர்.
விளையாட்டு மைதானம் தொடர்பில் இப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக இரு சமூகங்களுக்கிடையில் நிலவிவரும் ஓரு வித அசாதாரண சூழ்நிலையில். இவர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக மும்மன்ன கிராம முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வச்சத்திற்கான காரணம் குறித்து பிரதேச முஸ்லிம்கள் தெரிவிப்பதாவது
மும்மன்ன முஸ்லிம் பாடசாலை மைதானத்திற்கென 1972 ஆம் ஆண்டு பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஒருவரால் ஒரு ஏக்கருக்குக்கும் சற்று அதிகமான காணித்தொண்டொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அப்போது இந்தக் காணிக்கான உரித்துரிமைப் பத்திரங்கள், ஆவணங்கள் ஏதும் வழங்கப்படவில்லை.

இந்த விடயத்தை அறிந்த ஒரு சில இனவாதிகள், கடந்த புதுவருட விளையாட்டுக்களை நிகழ்த்துவது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்துடன் முரண்பட்டிருந்தனர். மேலும் உரிய ஆவணங்கள் அற்ற இந்தக் காணியைக் கைப்பற்றி பொது மைதானமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர். ஒரு சில இனவாத சக்திகளும் பெரும்பான்மை இனத்தவர்களும் இதன் பிண்ணணியில் செயற்பட்டிருந்தனர்.

மேலும் இந்தக் காணிப்பிரச்சினை பூதாகரமாகி முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கொள்வனவு, வர்த்தக நடவடிக்கைகளில் பகிஷ்கரிப்பிலும் பெரும்பான்மையினர் ஈடுபட்டிருந்தனர். இதனால் அங்கு வசிக்கும் அப்பாவி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். இந்த பிரச்சினையின் பின்னனியில் முக்கிய இனவாத சக்தியொன்றும் இயங்கி வந்தது.

இது தொடர்பில் பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை நிர்வாகத்தினர், பாழைய மாணவர் மற்றும் பெற்றோர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க தயங்குகின்றனர்.

இக்காணியை அரசாங்கப் பாடசாலைக்காக கையகப்படுத்த 1978 ஆண்டு சுற்றுநிருபங்கள் அனுப்பியும் 1982ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டும் பல நடவடிக்கைகள் எடுத்தமைக்கான பல ஆதாரங்கள் தற்போது பாடசாலை வசம் உள்ளது இருந்தபோதும் இந்த காணியை பொது மைதானமாக்க ஒரு சில அரசியல் வாதிகளும் சில அரச நிர்வாகிகளும் முயட்சி செய்கின்றனர் .

இவ்வாறு இப்பிரச்சினை தொடரும் நிலையில் இத்தகைய இக்கூட்டம் இன்று நடைபெறுவது பெரும் அச்சத்தை இப்பிரதேச முஸ்லிம்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறது. இது தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் முஸ்லிம் பொது அமைப்புக்ளுக்கும் அறிவித்திருப்பதாகவும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய இருப்பதாகவும் இப்பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய நபர்கள் தெரிவித்தனர்.

எது எவ்வாறு இருப்பினும் இப்பிரதே முஸ்லிம்களின் அச்சத்தைப்போக்கவேண்டிய பொறுப்பை ஏற்றுள்ளவர்கள் விரைந்து செயற்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே இப்பிரதேச மக்களின் இந்நிமிடங்களின் அவசர எதிர்பார்ப்பாகவுள்ளது

இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW