தப்லீக், ஜமாத்தே இஸ்லாமி, தவ்ஹீத் என இனிமேல் டிரஸ்டி போர்டில் இருந்து கொண்டு ஆட்டம் போட முடியாது..!! சட்டத்தை கொண்டு அடக்குவோம் என்கிறார் வக்பு சபைத் தலைவர் முள்ளிநியூஸ்

தப்லீக், ஜமாத்தே இஸ்லாமி, தவ்ஹீத் என இனிமேல் டிரஸ்டி போர்டில் இருந்து கொண்டு ஆட்டம் போட முடியாது..!! சட்டத்தை கொண்டு அடக்குவோம் என்கிறார் வக்பு சபைத் தலைவர்


வக்பு சபை தலைவர் யாஸீன் தெரிவிப்பு
பெரும்பாலான பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் பள்­ளி­வாசல் மூலம் தங்­க­ளது தனிப்­பட்ட கருத்­துக்­க­ளையே பரப்­பி­வ­ரு­கி­றார்கள். இது தவிர்க்­கப்­பட வேண்டும். பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களின் கடமை வக்பு சொத்­துக்­களைக் காப்­பாற்றி மக்­க­ளுக்குச் சேவை செய்­வ­தாகும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாஸீன் தெரி­வித்தார்.

முஸ்லிம் கிரா­மங்­களில் கொள்கை ரீதி­யான பிரச்­சி­னைகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்த தெரி­விக்­கையில் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நிர்­வா­கிகள் நிய­மிக்­கப்­ப­டு­வது தனிப்­பட்ட கொள்­கை­களைப் பரப்­பு­வ­தற்­கா­க­வல்ல.

நிர்­வாகம் சுயா­தீ­ன­மாக இயங்க வேண்டும். ஒரே கிரா­மத்தில் அல்­லது பிர­தே­சத்தில் கொள்கை ரீதி­யாக வேறு­பட்ட பல பள்­ளி­வா­சல்கள், தக்­கி­யாக்கள் இயங்­கு­வதால் பிரச்­சி­னைகள் உரு­வா­கு­கின்­றன. பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் தனிப்­பட்ட கொள்­கை­க­ளுக்கு இட­ம­ளிக்­காது செயற்­பட்டால் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­பி­ருக்­காது.

பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துக்குள் ஜன­நா­யகம் பேணப்­பட வேண்டும். நிர்­வாக சபையில் 30 வீதம் படித்த இளை­ஞர்கள் உள்­வாங்­கப்­பட வேண்டும். புத்­தி­ஜீ­வி­க­ளுக்கும் இட­ம­ளிக்­கப்­பட வேண்டும். முஸ்­லிம்கள் கொள்கை ரீதி­யாக பிள­வு­பட்டு ஆதிக்கம் செலுத்த முயன்றால் அது நாட்­டி­லுள்ள சட்­டத்தின் மூலம் தடுக்­க­மு­யற்­சிக்­கப்­படும்.

இதனால் நாம் பல பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­படும்.ஒரு பிர­தே­சத்தில் பல பள்­ளி­வா­சல்கள் இயங்­கி­வரும் நிலையில் அப்பள்ளிவாசல்களுக்கிடையில் கொள்கை ரீதியாக பிரச்சினைகள் ஏற்பட்டால் அப்பிரதேசத்திலுள்ள பெரிய பள்ளிவாசல் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியேற்படும் என்றார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW