The end : சகீபிடம் வேலை செய்தவரே அவரைக் கொன்றார்..!! எழு பேரைக் கைது செய்தது பொலீஸ் – கப்பம் கேட்க கடத்தப்பட்டார்

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமான் சகீப் கொலை தொடர்பாக சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 29ஆம் திகதி கொல்லப்பட்ட நபர் ஒருவரின் சடலத்தை மாவனெல்ல – ஹெம்மாத்தகம பகுதியின் வாடகை வண்டி மூலம் கொண்டு சென்ற நாட்டாமை (பொதி சுமப்பவர்கள்) உள்ளிட்ட 7 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தகரின் வியாபார கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அவரது பணியாளர் ஒருவரே, இவரை கப்பம் பெறும் நோக்கில் கடத்தி கொலை செய்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW