தம்புள்ளை கிரிக்கட் மைதான மோதல்.. கல், பொல்லு தாக்குதலில் 8 போலீசார் வைத்தியசாலையில் அனுமதி.
நேற்று தம்புள்ளையில் இடம்பெற்ற அவுஸ்திரேலியா - இலங்கை கிரிக்கட் போட்டியை பார்வையிட வந்த ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் வாயிலில் இடம்பெற்ற சண்டையில் 8 போலீசார் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.கல், மற்றும் பொருட்களால் தாக்கபட்ட போலிஸ் அதிகாரிகள் 3 பேர் மற்றும் கான்ஸ்டபிள்கள் 5 பேர் தற்போது தம்புள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாத்தளை பிரதான போலிஸ் அதிகாரிகள் இருவரும் இதில் உள்ளடங்குவதாகவும், தாக்குதல் தொடர்பில் இருவர் கைதாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW