“இலட்சியங்களை படிக்க இலட்சங்கள் எதற்கு ?”
தன் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை மூன்று வயதில் முடிவு செய்து ஆரம்ப பாட சாலைக்கு
1 லட்சம் செலவு செய்யும்நவீன காலகட்டம் இது . தற்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டது .
மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் அடுத்து என்ன படிக்க வேண்டும் ? எதை படித்தால் வருமானம் பொருளாதரத்தை ஈட்ட முடியும் என்ற சிந்தனையில் புலம்பும் நேரமாக தற்போது இருக்கும்.
பல லட்சங்களைக் கொடுத்தாவது மருத்துவ படிப்பிற்க்கான சேர்க்கையை பெறத்துடிக்கும் பேரங்களும்,ஆயிரத்து நூறு மதிப்பெண் பெற்றும் கல்லூரியில் சேருவதற்கு காசு இல்லாமல் வளாகத்தில் காத்துக் கிடக்கும் துயரங்களையும் நாம் வாழ்வில் பார்த்து கடக்கும் காலம் இது .
பிறர் பொருளாதாரத்தோடு போட்டி போட்டு பார்க்கும் சமூக சூழ்நிலையில் பொருளீட்டும் வெறியில் நம் பிள்ளைகளையும் பந்தயக் குதிரைகளாக மாற்றும் நாம் ஒன்றைக் கவனிக்க தவறி விட்டோம் . அது நாம் இதுவரை பிள்ளைகளை கற்க வைத்தது உண்மையில் கல்வியா என்பதே அந்தக் கேள்வி .
எது தலையாய அறிவு ?
***************************************
விலங்குகளுக்கு உள்ள அறிவு ஐந்து ஆகும் . அவை கூட பகுத்து அறியும் ஆற்றல் உள்ளது . விலங்குகளுக்கு முன் உணவையும் மலக்குப்பைகளையும் வைத்தால் உணவை எடுத்துக் கொண்டு உணவற்ற குப்பையை நகற்றி விடும்
உலகில் உள்ள அத்துனை மனிதர்களுக்கும் உள்ள அறிவு ஆறாம் அறிவு ஆகும் . மனிதன் யதார்த்தமாகவே தர்க்க ரீதியான அறிவை பெற்றுள்ளான். ஓர் இடத்தில் புகை வருகின்றது என்றால் அவன் அறிவு அனிச்சையாக நெருப்பு இருக்கும் என்பதை அறிகின்றான் .
உண்மையில் அறிவுக்கு எல்லாம் பரிபூரணமான மற்றும் உச்சகட்ட அறிவாக இருப்பது வஹி அறிவு ஆகும் .இவற்றை சிந்திக்கும் அறிவு என்பார்கள் .இறைவன் தான் படைத்த மனித இனத்திற்கு ஒவ்வொரு விடயத்தைக் குறித்தும் சரியா அல்லது தவறா என்று வழிகாட்டுவதற்கு வழங்கிய அறிவு ஆகும் . இவற்றை சிந்தித்து அறிகின்ற போதே மனிதன் முழுமையான அறிவைப் பெறுகின்றான் .
வஹி அறிவில் உருவாகிய அறிஞர்கள் :
****************************************************************
குர் ஆன் மூலம் பெறப்பட்ட வஹீயின் அறிவு அகில உலகமெங்கும் கோலோச்சிய காலத்தில் பள்ளிவாசல்கள் எல்லாம் அறிவை போதிக்கும் பாடசாலைகளாக இருந்தது . தொழுகைக்காக அழைக்கபட்ட பாங்கோசை அறிவிற்க்காகவும் சேர்த்து அழைக்கப்பட்ட காலமாக இருந்தது . இந்த வஹீயின் அறிவே உலகிற்கு ஒழுக்கத்தில் கட்டமைக்கப்பட்ட நாகரீகம் பரப்பட்டது . .
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உயரமாக கட்டப்பட்ட கட்டிடக் கலைக்கு சொந்தக்காரர்கள் இஸ்லாமியர்கள் ஆவர் . கட்டிடக் கலையிலும் கணிதக் கல்வியிலும் முன்னோடிகளாக இருந்தவர்கள் இஸ்லாமியர்கள் என்கிறது குறிப்புக்கள் .அல் ஜிப்ராவை உலகிற்கு தந்தவர் அல் குவாரிஸ்மி என்ற இஸ்லாமிய அறிஞர் ஆவார் .
கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் பாக்தாத் என்ற நகரம் அறிவை உலகிற்கு போதிக்கும் கல்விக்கேந்திரமாக விளங்கிற்று . அங்கே பல்கலைகழகங்களும் நூலகங்களும் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புக்கள் பேசுகின்றன .எகிப்தும், துனிசியாவும் ஸ்பெயினும் அறிவுச்சுடர் ஏற்றும் தீபந்தமாய் விளங்கியது .
அர் ராஸி என்பவர் மருத்துவ ஆய்வுகளில் முன்னோடியாகத் திகழ்ந்தார் . சின்னம்மைக்கு மருந்து கண்டு பிடித்தவர்கள் அரேபியர்கள் .சரீரத்தை அறுக்கும் 200 கருவிகளை உலகிற்கு தந்தவர்கள் இஸ்லாமியர்கள் ஆவர் .உலகின் முதல் மருத்துவமனையை ஈராக் நாட்டில் நிறுவியவர்கள் வஹி அறிவை சுமந்த இஸ்லாமியர்கள் ஆவர்.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் அறுவை சிகிச்சையின் தந்தை என்று போற்றப்படகூடியவர் அல் காசிம் இப்னு அப்பாஸ் ஆவார் . தனது வாழ் நாள் முழுவதும் கல்விக்காக அர்பணித்து கலைக்களஞ்சியத்தை எழுதியவர் பௌதீகம் மற்றும் அறுவை சிகிச்சையில் சிறந்த விளங்கிய மா மேதை சஹ்ராவி உடைய அறிவும் சிந்தனையும் 500 வருடங்களாக ஐரோப்பிய பல்கலைக் கழகத்தில் பாதுகாக்கப்பட்டது .
கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் உலகம் முழுக்க இஸ்லாமியர்களின் அறிவின் வல்லமை மக்களால் பேசப்பட்டது . முஸ்லிம்களின் வாணிபம் மற்றும் தொழில் நுட்ப அறிவு உலகை வென்றது . இஸ்லாமிய சிந்தனையும் குர் ஆனிய அறிவும் அந்த அறிஞர்களின் ஆன்மாவில் நுழைந்து ஆட்சி செய்ததே காரணம் ஆகும் .
தனது 10 ஆம் வயதில் குர் ஆன் கல்வியைக் கற்று ,தனது தனது 14 ஆம் வயதில் சட்டக்கல்வியில் மேதையாகி, தனது 18 ஆம் வயதில் உளவியலையும் ,தத்துவத்தையும் கரைத்து குடித்து விட்டு ,கணிதம் ,ரசாயனம், வானியல், கட்டிடகலையில் சிறந்த தேர்ச்சி அடைந்தவர் மா மேதை இப்னு சீனா ஆவார் . இறைக்கடமையில் அசட்டை இல்லதாவரகவும் , தொழுகையில் இறை நம்பிக்கை சுவையை பெற்றவராக திகழ்ந்தார் .
மருத்துவத்துறையில் 16 நூல்கள் ,பௌதீகத்தில் 68 நூல்கள் , வான சாஸ்திரத்தில் 12 நூல்கள், கவிதை துறையில் 4 நூல்கள்
தனது 100 வது நூலில் மறுமை பற்றிய சிந்தனையை உலகிற்கு தந்தார் .
கலீலியோ உலகம் உருண்டை என்று பரப்பும் முன்பே பூமியின் விட்டம் குறித்து உலகிற்கு சொன்னவர் அல் புரூனி என்ற அறிஞர் ஆவார் . கோள பூமியைப் பற்றியும் , சூரிய சுழற்சிப் பற்றியும் , பூமி சுழலும் அச்சுகளை பற்றியும் உலகிற்கு சிறந்த உணமைகளை அறிந்து சொன்னவர் ஆவர் . இவர் எழுதிய ஆய்வு நூல்கள் மட்டும் 180 என குறிப்புகளால் சொல்லப்படுகின்றது .
கெப்லர் உலக வரைபடம் தந்ததற்கு முன்பே உலகிற்கு வரைபடம் தந்தவர் அல் இத்ரூஸீ என்ற முஸ்லிம் அறிஞர் ஆவார் . இந்த உலகை 28 வருடங்கள் வலம் வந்து மக்கள் பற்றியும் , புவியியல் கூறுகள் பற்றியும் செய்திகளை முன்வைத்து உலகை கண்டறிந்தவர் இப்னு பத்தூதா என்ற ஆவார் . மாறாக மெகல்லன் மற்றும் கொலம்பஸ் அல்ல என்கிறது உண்மையான வரலாற்று செய்திகள் .
இது போன்று மறைக்கப்பட்ட செய்திகளும் வரலாற்றுக் குறிப்புக்களும் ஏராளமாக உள்ளது .
அவற்றை உலகிற்கு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தற்போது நாம் இருக்கின்றோம் .
இறை நிராகரிப்பை நோக்கிய நவீன கல்விமுறை :
***********************************************************************************
இன்றைய கல்விமுறையின் அஸ்திவாரம் டார்வினின் தத்துவத்தாலும் , மனோதத்துவ மருத்துவர் சிக்மெண்ட் ப்ராஇட் சிந்தனையாலும் உருவாக்கப்பட்டவை ஆகும் . வஹியின் கல்விமுறைக்கு எதிரான இத்தகைய கல்விமுறைக்கு மதசார்பற்ற கல்விமுறை என்று பெயர் .
குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்று கல்விசாலையில் இளைய தலை முறையினரை ஆணித்தரமாக நம்பவைத்து இறைமறுப்பின் பக்கம் நவீனக் கல்விமுறையால் திருப்பப் படுகின்றது .
சுதந்திர பாலியல் உறவுமுறைகளை அங்கீகரிப்பதன் மூலமே மேற்கத்திய தலைமுறைகள் நாகரீகம் மற்றும் வளர்ச்சியை நோக்கி செல்ல முடியும் என்ற சிந்தனையை ஆணித்தரமாக பரப்பியவர் சிக்மெண்ட் ப்ராஇட் ஆவர் .
உலகிற்கு நாகரீகத்தையும் , அறிவையும் போதித்த அரேபிய பல்கலைக் கழகங்கள் நெருப்பிட்டு அழிக்கப்பட்டது .பிறகு முஸ்லிம் அறிஞர்களின் அறிவியல் சிந்தனைகள் மேற்கின் சூழ்ச்சியால் களவாடப்பட்டது .
மேற்கத்திய அறிஞர்களால் வஹீ அறிவு மற்றும் இஸ்லாமிய நாகரிக பண்பாட்டிற்கு எதிராக நாத்திக சிந்தனையையும் மனோ இச்சையையும் முன் வைத்து நவீன கல்விக் கோட்பாடு உருவாக்கப்பட்டது .அதன் அடிப்படையில் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்டது . ஐன்ஸ்டீன் , நியூட்டன் , கலிலியோ போன்ற இறைமறுப்பு அறிஞர்கள்
நவீன கல்விக் கோட்பாட்டின் கதாநாயகர்களாக தற்போது போற்றப் படுகின்றனர் .
மதச்சார்பற்ற கல்விமுறையின் விளைவுகள் :
***********************************************************************
மேற்கத்தியக் கல்விக் கோட்பாட்டை கற்பதற்காக அரபு தேசங்களில் இருந்தும்
வளரும் தேசங்களில் இருந்தும் அதிகமாக நவீன தலை முறையினர் ஈர்க்கப்பட்டு மேலை நாடுகளுக்கு சென்றனர் .
இஸ்லாமிய பண்பாட்டிற்கு எதிரான சிந்தனைகளை விதைக்க .கல்வியில் சிறந்து விளங்கும் முஸ்லிம்கள் பலரையும் ஏகாதிபத்திய நாடுகள் மேற்படிப்பிற்க்காக தேர்ந்தெடுத்தது .
கல்வி கற்று திரும்பி வரும் பொழுது மதசார்பற்ற மற்றும் தேசியவாத சிந்தனைகளால்
மெருகேற்றப்பட்டு இருந்தனர் . இஸ்லாமிய அரசியல் சிந்தனைகளுக்கு எதிராக பேசத் துணிந்தனர் .
நாத்திக கல்விமுறையால் பெறப்பட்ட கல்வி , சிந்தனை , அறிவு ,வரலாறு, பொருளாதாரம்,
அரசியல் ,சட்டம் .நாகரீகம் இந்த உலகை ஆள நியாயமானவை என்று அறிஞர்கள் ஆழமாக நம்பினர் .
இங்கிலாந்த் ,பிரான்ஸ் , ரஷ்யாவின் இலக்கிய படைப்புகளே சிறந்தவை .என்றும்
மேலும் இஸ்லாமிய படைப்பில் உயிர்ப்பு இல்லை எனக் கருதினர் .
லாரென்ஸ் பிரவுன் என்பவர் ப்ராஸ்பெக்ட் ஆப் இஸ்லாம் என்ற நூலில் சொல்கிறார்
இந்தியாவில் குற்றவியல் சட்டங்களை நீக்கி விட்டு தனியார் சட்டங்களை வைத்த போது முஸ்லிம்கள் ஆரம்பத்தில் எதிர்ப்பைக் காட்டினாலும் அவற்றை எல்லாம் மறந்து பிறகு ஏற்று கொள்ளும் மனோ நிலைக்கு வந்தார்கள் என்கிறார் .
துருக்கி அல்பேனியா போன்ற நாடுகளில் மன விலக்கு மற்றும் வாரிசு உரிமை போன்ற சட்டங்களில்
தன் மனோ இச்சைக்கு ஏற்ப சட்ட திருத்தங்களை கொண்டு வந்தனர் .
பிறரை வழிநடத்தும் வகையில் இஸ்லாம் சிறந்த வழிகாட்டுதலை பெற வில்லை என்று நவீன கல்விமுறையில் பாடம் பயின்ற முஸ்லிம் கல்வியாளர்கள் உலகில் சாட்சி சொல்லும் நிலைக்கு ஆளானார்கள் . இஸ்லாமிய கொள்கையின் அடிப்படை நம்பிக்கைக்கு எதிராக தர்க்கரீதியாக கேள்வி எழுப்பும் தலைமுறையினர் நவீனக் கல்வி கோட்பாட்டால் தயாரிக்கப்பட்டார்கள் .
உரத்த சிந்தனை :
**************************
இந்தியாவை தற்போது ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்தால் ஆங்கிலேயருக்கு அடிமை சேவகம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட மெக்காலே கல்வித்திட்டங்கள் மற்றும் முஸ்லிம்களிடமிருந்த இந்தியாவைக் கைப்பற்ற ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஆங்கிலோ இந்தியன் கிறிஸ்துவ பள்ளிக்கூடங்கள் ஒரு வகை ஆகும் .
ஆரிய சனாதன கொள்கையை இந்தியா முழுவதும் நிறுவதற்கு 1875 ஆம் ஆண்டில் தயானந்த சரஸ்வதி என்பவரால் ஆரிய சமாஜம் உருவாக்கப்பட்டது . கல்வித் துறையை ஹிந்துத்வா சிந்தனை உடையவர்கள் கைப்பற்ற வேண்டும் என்று 1869 ஆம் ஆண்டில் ஏறாத்தாழ 147 வருடங்கள் முன்பு உருவாக்கப்பட்ட ஆங்கில வேதிக் பள்ளிகூடங்கள் ஒருவகை ஆகும்
சிசு மந்திர் மற்றும் வித்யாலய ப்ராஜெக்ட் போன்ற பள்ளிகூடங்களும் இந்தியா முழுக்க CBSE போன்ற பாடத்திட்டங்களை உருவாக்கி பாரத் மாதா கி ஜெ என்று சொல்லத் துடிக்கும் பள்ளிக்கூடங்கள் ஒருவகை ஆகும்
மேற்சொன்ன கல்விமுறையில் உள்ள சூழ்ச்சி வலைகளையும் தூர நோக்கங்களும் அறியாமலேயே மதசார்பற்ற கல்வி முறையை கற்றுக் கொள்ளவும் பள்ளிக்கூடங்களில் நமது குழந்தைகளை சேர்க்கவும் நாம் அதிகாலை 4 மணிக்கே நுழைவாயிலில் வரிசையில் காத்துக் கிடக்கின்றோம் .
சிலர் இஸ்லாமிய பள்ளிக்கூடங்கள் என்று ஆரம்பித்த முயற்சிகள் எல்லாம் தற்போது உண்மையான இலக்குக்களை காட்டி தரமால் , மறைக்கப்பட்ட நமது கல்வி முறையை எடுத்து சொல்லாமல் சம்பிரதாய சடங்குகளாக அதிக கட்டணங்களை பிடுங்கும் வணிக நோக்கமாய் மாறி வருவது சமூக அறிவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கின்றது .
நவீனக் கல்வி கோட்பாட்டில் 95 % அதிகமான மதிப்பெண்கள் பெறுபவருக்கு மட்டும் கல்வி உதவி தொகைவழங்கி அறிவு ஜீவிகளாக மாற்ற ஆர்வலர்கள் முன் வருவதும் , இது போன்ற மனப்பாடம் செய்து வெற்றி பெரும் மாணவர்கள் உச்சாணிக் கொம்பில் வைத்து புகழ்வதும் , தேர்வில் தோல்வி அடைபவரை இகழ்ச்சியாக பார்ப்பதும் வேடிக்கை ஆகும் .
.
சாகித்ய அகடமி விருதை பெற்ற எழுத்தாளர் இரா.நடராஜன் சிறுவர் இலக்கியங்கள், கல்வி குறித்த புத்தகங்கள் ஏராளம் எழுதியுள்ளார் .அவர் தற்போதைய கல்வி மற்றும் தேர்வு முறையின் அவலங்களை ஊடகங்களில் , இலக்கியங்களில் தோலுரித்து காட்டுகிறார் .
பொருளீட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தையும் , இஸ்லாமிய நாகரீக வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கும்
இந்த கல்விமுறைக்காக நமது இளைய தலைமுறையினர் தற்கொலை முயற்சிக்கு செல்வது வடிகட்டிய முட்டாள்தனம் அல்லவா ?
உலக கல்வி என்றாலும் மார்க்க கல்வி என்றாலும் அது இறைவனின் வார்த்தையை மேலோங்க செய்ய வேண்டும் என்பதே அதன் இலக்கு ஆகும் . கல்வியின் உச்சக்கட்ட அறிவு இறை அச்சம் என்கிறார்கள் கல்வியாளர்கள் .
அன்றைய காலத்தில் வஹியின் சிந்தனையால் உருவாக்கப்பட்டபல்கலைக்கலகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் போல இன்று உருவாக்க பெரும் முயற்சி எடுக்கப்பட வேண்டும் . அது வரை நவீனக் கல்விக் கோட்பாட்டின் கோளாறுகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லி பாடசாலையில் எச்சரிக்கை உணர்வோடு இருக்க விழிப்புணர்வு தர வேண்டும்
எகிப்து தேசத்தில் சஹீத் செய்யத் குத்துப் அவர்கள் ஆரம்பத்தில் மத சார்பற்ற கல்விமுறையை கற்றாலும் மேலை நாட்டு கல்விமுறையை பெரிதாக ஆரம்பத்தில் எண்ணினாலும் சிறுவயதில் தன் பெற்றோர்களிடம் கற்ற குர்ஆன் கல்வியும் , இஸ்லாமிய விழுமியங்களும் மேலை நாட்டில் கல்வித்துறை சம்பந்தமான மேற்படிப்பிற்காக செல்லும் சமயம் அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சியை உணரச் செய்தது .அவர்களின் வலையை விட்டு வெளியே வர காரணமானது . எகிப்து திரும்பிய உடனே அவர் இக்ஹ்வான் முஸ்லிமீன் என்ற இயக்கத்தில் இணைந்து சத்தியப் பாதையில் பணியாற்ற விரைந்தார் .
சரியான கல்விமுறையும் , பாட சாலையும் , ஆசிரியர்கள் இல்லாத நமது சமூகத்தில் இறை மறையும் , நல்ல நூல்களுமே நமது பாடப் புத்தகங்கள் ஆகும் . நூலகங்களும் இஸ்லாமிய அறிஞர்களும் , இஸ்லாமை போதிக்கும் பெற்றோர்களே நமது பாட சாலைகள் ஆகும் .மீண்டும் நாம் வரலாறு படைப்போமா ?
இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
