குரங்கு பாஞ்சான் தேசிய வேலைத்திட்டம் அப்துல்லா மக்ரூப் எம்.பி தலைமையில் ஆரம்பம் முள்ளிநியூஸ்

குரங்கு பாஞ்சான் தேசிய வேலைத்திட்டம் அப்துல்லா மக்ரூப் எம்.பி தலைமையில் ஆரம்பம்


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் மகாவலி அபிவிருத்தி திட்டத்தில் மகாவலி நீரை குரங்கு பாஞ்சான் குளத்திற்கு கொண்டு வரும் வேலைத்திட்டம் தொடர்பாக ஆராயும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் குழு பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் குரங்கு பாஞ்சான் பகுதிக்கு சென்றனர்.

கடந்த 2001ம் ஆண்டு ஆட்சியமைத்த ஐக்கிய தேசிய முன்னணி அரசின் விவசாயிகளுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் அப்போதைய மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த கௌரவ காமினி ஜெயவிக்ரம பெரேரா அவர்களினால் 2002, 2003ம் ஆண்டு திட்டமிடப்பட்டு 2004ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் கைவிடப்பட்டு மீண்டும் 2015, 2016ம் ஆண்டின் தேர்தல் வெற்றிக்குப்பின்னர்

ஜனாதிபதியும் மகாவலி அபிவிருத்தி அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முன்னெடுக்கப்படும் மகாவலி அபிவிருத்தித்திட்டத்தின் இறுதிக்கட்டமான குரங்கு பாஞ்சான் குளத்திற்கு மகாவலி நீரைக்கொண்டு செயற்றிட்டத்தின் மூலம் குரங்குபாஞ்சான், கண்டல்காடு, தீனேரி, கிரான், சின்னகிறான் ஆகிய பிரதேசங்களுக்குட்பட்ட சுமார் 4000 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்காணிகளுக்கு நீரைப்பாய்ச்சுவதன் ஊடாக விவசாயிகள் தடைகளின்றி இரு போகங்களிலும் விவசாய உற்பத்திகளை மேற்கொள்ள முடியும்.

மேலும் ஏற்கனவே மூன்று தடவைகள் உடைப்பெடுத்த குரங்கு பாஞ்சான் குளக்கட்டினை குறித்த இத்திட்டத்தின் மூலம் 3 அடி வரை உயர்த்தி விசாலப்படுத்தி, நீர்கொள்ளளவை அதிகரித்து தேவையான தொழிநுட்ப முறையில் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு தேவையான இடங்களில் சீராக்கிகள் அமைப்பது சம்பந்தமாக; பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப் அவர்களுடன் நீர்ப்பாசன திணைக்கள பிரதிப்பணிப்பாளர் நீர்ப்பாசன திணைக்கள பொறியியட் குழு, உத்தியோகத்தர்களுடன் குரங்குபாஞ்சான் குளம் அதனுடன்தொடர்புடைய இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டது. குறித்த இத்திட்டத்தில் குரங்குபாஞ்சான் விவசாய சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டது.

அத்துடன் நீர்ப்பாசன திணைக்களத்தின் 200 million ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கிண்ணியா, தம்பலகாம பிரதேச விவசாய பெருமக்களின் நலனுக்காக வான் எல மரிக்கார் பாலத்திலிருந்து கந்தளாய் நோக்கி 14 மீட்டர் அகலத்தில் 3 km நீளத்தில் பிரதான வாய்க்காலினை புனரமைத்தல். (30/04/2016)ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிவத்த பாலத்திலிருந்து குசும்பன்கட வரையிலான 2km நீளம் கொண்ட வாய்க்காலின் மிகுதி 1km வரையில் வாய்க்காலினை புனரமைத்தல். அத்துடன் கந்தளாய் குளத்திலிருந்து சூரங்கள் வரையிலான 36km நீளமான பிரதான வாய்க்காலில் 5 regulator (சீராக்கிகள்) அமைத்தல் பாக்கிரான்வெட்டை 02 regulator (சீராக்கிகள்)
புளியடிக்குடா 02 regulator (சீராக்கிகள்)
வன்னியனார்மடு 01regulator (சீராக்கிகள்) அமைத்தலும் வாய்க்காலினை அகலப்படுத்தலும், விவசாய வீதி அமைத்தலும்.

குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக 18.08.2016 இன்று பாராளுமன்ற உறுப்பினர் நீர்ப்பாசன திணைக்கள பிரதிப்பணிப்பாளர், பொறியியலாளர்கள், விவசாய சங்க உறுப்பினர்கள் சகிதம் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் கிண்ணியா, தம்பலகாம பிரதேசத்திக்குட்பட்ட மேலதிகமாக சுமார் 2000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்ள முடியும். அத்துடன்விவசாய நிலங்கள் பாதுகாப்படுவதோடு அறுவடைகளை ஏற்றி இறக்குவதற்கு இலகுவாக அமையும்.




இதனை நண்பர்களுடன் பகிரவும் செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW